8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

திரிபுராவின் நலுவா நகரில் நடைபெற்ற பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சின் விபரம்:-

பாஜக கூறிவரும் குஜராத் மாடலை அம்மாநில மக்களே நிராகரித்துவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது 165 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக மூன்று இலக்கத்தைத் தொட முடியாமல் நின்றுவிட்டது. தற்போது பிரதமரே கூட குஜராத் மாடல் பற்றிப் பேசுவதில்லை. பாஜகவின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறாக, இடதுசாரிகள்தான் உண்மையான மாற்று. ஏராளமான சாதனைகளை திரிபுராவின் இடது முன்னணி தலைமையிலான அரசு செய்திருக்கிறது. எனவே, வருகின்ற திரிபுரா சட்டமன்ற தேர்தலில் #CPIM தலைமையிலான இடது முன்னணிக்கு வாக்களித்து 8வது அமைச்சரவையை மக்கள் அமைப்பார்கள்.

29 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய சதிவேலை ஒன்று நடந்தது. மத்திய அரசும், நடுவர் வேலையைச் செய்ய வேண்டிய தேர்தல் ஆணையமும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கை கள் மூலமாக இடது முன்னணி அரசைப் பொறுப்பிலிருந்து அகற்றின. ஆனால் அத்தகைய வரலாறு மீண்டும் திரும்பாது. எனினும் தற்போது தீட்டப்பட்டு வரும் சதிவேலைகளிலிருந்து பாதுகாக்கத் தேவையான பணிகளை நாம் செய்ய வேண்டும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஏராளமான வாக்குறுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அளித்தது. அதில் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.

ஆனால் அந்தத் தோல்வியிலிருந்து மக்களைத் திசைதிருப்ப மதம், மாட்டிறைச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்பி வருகிறார்கள். மக்கள் மத்தியில் பிளவுவாத உணர்வுகளை ஏற்படுத்தி, மாநிலத்தில் அமைதியைக் குலைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். திரிபுராவைப் பிளவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படுபவர்களோடு பாஜக குலாவிக் கொண்டிருக்கிறது. நாம் இதை அனுமதிக்க முடியாது. மக்களின் நலன்களை சேதப்படுத்த நினைக்கும் அவர்களுக்கு எந்தவித வாய்ப்பையும் நாம் அளித்துவிடக் கூடாது.

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி