admin

பாபர் மசூதி இடிப்பு வழக்கு; கயவர்களை குற்றமற்றவர்கள் என்றிருக்கிறது நீதித்துறை

லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பாபர்மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேர்களையும் விடுதலை செய்து அளித்துள்ள தீர்ப்பு, நீதியை கேலி செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை அளிப்பதற்காக 28 ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் கூட நீதி வழங்கப்படவில்லை. மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அங்கே நின்று அந்தக் கிரிமினல் நடவடிக்கைக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த பாஜக-விஎச்பி-ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிப்புக்கு சதி செய்த குற்றச்சாட்டில் அப்பாவிகள் என்று நீதிமன்றம் கண்டிருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் ...

Read More »

மதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்!

இன்றைய இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள் இன்னொரு மதத்தின் பக்தர்களுக்கு ஜென்ம விரோதிகளாக விளங்குகிறார்கள். ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்கிற ஒற்றைக் காரணமே இன்னொரு மதத்தைச் சார்ந்தவருக்கு எதிராக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. இதை நம்புவதற்கு கடினமாக இருந்தால் சமீபத்தில் லாகூரில் வெடித்த வன்முறைகளைப் பாருங்கள். முஸ்லீம்கள் அப்பாவி சீக்கியர்களையும் இந்துக்களையும் எப்படியெல்லாம் கொன்று குவித்திருக்கிறார்கள். சீக்கியர்கள் கூட தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது இதைவிட மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக இந்த கொலைபாதகம் ...

Read More »

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர். சமூக விரோதக் கும்பல்களின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு காவிச் சாயம் பூசுவது, சேதப்படுத்துவது, இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் மதவெறி சக்திகளும், இந்துத்துவ வெறியர்களும் தங்களது அரசியல் லாபத்திற்காக அவர்களது தலைவர்களின் ஆசியுடன் செய்து வருகின்றனர். இதன் ...

Read More »

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு பேரிழப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மக்கள் மனங்கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துவதுடன், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளி, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்கவர்ந்தவர். 20 வயதில் பாடத் துவங்கி 55 ஆண்டுகளாக பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடி மக்கள் மனங்களில் நிறைந்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளரான கே.வி.மகாதேவனால் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து இன்றைய ...

Read More »

நீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…

அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீளாவேதனையுடன் கேட்கிறோம் எப்பொழுது நீட் எனும் தேசிய தகுதித் தேர்வினை எப்பொழுது கைவிடுவீர்கள். நீட் எனும் திரிசூலத்தில் மூன்று முனை இருக்கிறது. ஒரு முனை, மாநில அரசின் கல்வி முறையையும், மாநில உரிமையையும் குத்திக் கிழிக்கிறது, மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று, கோச்சிங்கை கொண்டாடுகிறது, மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது. இந்தக் கொடிய கொலைக்கருவியை இன்னும் எத்தனை குழந்தைகளின் மரனத்துக்குப் பின் கீழே போடுவீர்கள்? மருத்துவ ...

Read More »

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உமர் காலித், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, ஜேஎன்யு மாணவர்களான நடாஷா நர்வால், தேவங்கானா கலிதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், ஜமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் மீரான் ஹைதர், அஷிப் தன்ஹா, சஃபூரா ...

Read More »

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும்,  திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே. தங்கவேல் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 14  தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று (13.09.2020) அதிகாலையில்  காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Read More »

மாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை நீட் தேர்வின் மூலம் தகர்த்து வருகிறது மத்திய அரசு. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென நாடு தழுவிய அளவில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தபோதும் மத்திய பாஜக அரசு இதற்கு எதற்கும் செவி சாய்க்காமல் நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது, நீதிமன்றங்களும் அதற்கு ஆதரவாக தான் இருக்கின்றன. இதன் விளைவாக, எத்தனையோ மாணவர்களும் மாணவிகளும் மருத்துவ கனவு தகர்ந்து தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். கடந்த 8ம் தேதி, அரியலூர் மாவட்டம் செந்துறை ...

Read More »

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா? சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி

2000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் துணைத் தலைவராக அந்தத் தொகுதி எம்பியும், உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்களும் இருப்பார்கள் என்றும் விதியுள்ளது. ஆனால், அதன்படி மதுரையில் ஒரு முறைகூட ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்படவில்லை. ஏன்? கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில், பெரியார் பேருந்து நிலைய பணிகளுக்கான திட்ட மதிப்பீடு 159.70 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அது திடீரென 167.40 கோடியாக உயர்ந்துள்ளது ஏன்? 12 ...

Read More »

சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்

கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் தொழில் புனரமைப்பிற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கோவிட் கால அவசர கடன் வசதித் திட்டம் (GECL) அறிவிக்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு இத்திட்டம் எளிமையாக சென்றடைவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் முன் முயற்சியில் வீடியோ கான்பரன்ஸ் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றது. தொழில் முனைவோர் அமைப்புகளின் சார்பிலும் வங்கிகளின் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  ஹரி ...

Read More »