Ravi Raja

38 எம்பிக்கள் தமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் இதுவரை என்ன குரல் கொடுத்திருக்கிறார்கள். – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இன்று மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் பதில்… நிருபரின் கேள்வி: தமிழகத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 38 நாடாளுமன்ற உறுப்பினா்கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் நலனுக்காக இதுவரை என்ன குரல் கொடுத்திருக்கிறார்கள் என்று தமிழக முதலமைச்சா் கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்து தங்களுடைய பதில் என்ன? சு.வெங்கடேசன் எம்.பி அவா்களின் பதில்… கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்கு எதிராகவும் இந்த நாட்டிற்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட அனைத்து மசோதாக்களை எதிர்த்து தொடா்ந்து போராடியிருக்கின்றோம். தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி ...

Read More »

இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

நாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சு. வெங்கடேசன் எம்.பி கோரிக்கை. மாண்புமிகு பிரதமர் அவர்களே!வணக்கம். நான் பருத்தி விலைகளை ஒழுங்கு செய்யவும், விலை ஆதரவுக் கொள்கைகளை அரசு மேற்கொள்வதற்குமான தலையாய நோக்கோடு அமைக்கப்பட்ட இந்தியப் பருத்திக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த சில பிரச்சினைகளை தங்களின் பார்வைக்கு கொண்டு வர விழைகிறேன். இக் கழகம் விவசாயிகளுக்கும், ஜவுளித் தொழிலுக்கும் இயற்கையாகவே பயன்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ...

Read More »