ஆசிரியர் 1

குவியல் குவியலாக மக்கள் வெளியேற்றம்: சென்னையிலேயே அடுக்குமாடி வீடுகள்: #CPIM வலியுறுத்தல்.

தற்போது, மக்கள் குடியிருக்கக்கூடிய இடங்களில் அல்லது அதற்கு அருகாமையில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். 50 மீட்டருக்கு வெளியே உள்ள வீடுகளை அகற்றும் சட்டவிரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். அந்தந்தப்பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கவுன்சிலர்களும் அரசின் இந்த முடிவை எதிர்த்து குரல் எழுப்புவதுடன் நகர்ப்புற ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

Read More »

நல்லூர் தலித் மக்கள் மீது சாதிய சக்திகளின் கொடூரத் தாக்குதல் தமிழக அரசு தலையிட சிபிஐ (எம்) வலியுறுத்தல்

29.08.2017 நல்லூர் தலித் மக்கள் மீது சாதிய சக்திகளின் கொடூரத் தாக்குதல் தமிழக அரசு தலையிட சிபிஐ (எம்) வலியுறுத்தல் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான தெற்கு காலனியில் 50 தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 25 விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்று மாலையில் இப்பகுதி மக்கள் ஒரு விநாயகர் சிலையை அமைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிராமத்தில் வாழும் சாதி இந்துக் குடும்பங்களைச் சார்ந்த சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருந்த ...

Read More »

ஜெயலலிதா மரணம் – தொடரும் சர்ச்சைகள் பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடுக!

எனவே, ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரிக்கப்படவேண்டியுள்ளதால், நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையிலான விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

Read More »

நீட் தேர்விற்கு விலக்கு கோரி போராடிய மாணவர்களை சிறையிலடைப்பதா?

10.09.2017 நீட் தேர்விற்கு விலக்கு கோரி போராடிய மாணவர்களை சிறையிலடைப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்   நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிப்பது, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது, மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாத அஇஅதிமுக அரசு  மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முனைகிறது. கோரிக்கைகளின் நியாயத்தை உணராத மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களின் கல்வி ...

Read More »

தலித்-பழங்குடி மாணவர்கள் கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

09.09.2017 தலித்-பழங்குடி மாணவர்கள் கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்   பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்டு உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், தலித் கிறித்தவர் மாணவர்களுக்கு சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நியமனக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை உதவித் தொகையாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசே செலுத்தி வந்தது. தற்போது இந்த உதவித் தொகை மூன்றில் ஒரு பங்காக திடீரென வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. இது அரசு ஒதுக்கீட்டில் உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், தலித் கிறித்தவ ...

Read More »

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அரசின் இந்த அலட்சியத்தை கண்டித்தும், சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்த வலியுறுத்தியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்திய பின்னரும் அதிமுக அரசு அரசுப்பணியாளர்களை வஞ்சித்து வருகிற நிலையில் வேறு வழியின்றி அரசு ஊழியர்கள் மீண்டும் போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

Read More »

தமிழக மாணவி அனிதா தற்கொலை, இரங்கல் – கண்டன இயக்கங்கள் நடத்த கட்சி அணிகளுக்கு அறைகூவல்!

தமிழக மாணவி அனிதா தற்கொலை வேதனை தருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் ! கண்டன இயக்கங்கள் நடத்த கட்சி அணிகளுக்கு அறைகூவல்! தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், வேதனை கொடுப்பதாகவும் உள்ளது. நீட் தேர்வு திணிக்கப்பட்டதால், மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை இழந்த ஏராளமான எளிய குடும்பங்களுக்கு இது மேலும் ஒரு துயரச் செய்தியாகும். அனிதாவின் இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது இரங்கலை தெரிவிக்கிறது. அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில், ...

Read More »

தமிழக அரசியல் சூழல் குறித்து ஆளுநர், ஜனாதிபதி சந்திப்பு …

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து குடியரசு தலைவரை #CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி & தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தார்கள். முன்னதாக தமிழகத்தில் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட சிபை, விசிக, மமக கட்சி தலைவர்கள் தமிழக ஆளுநரை சந்தித்திருந்தனர்.

Read More »

சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சித் தலைவர்கள் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சித்  தலைவர்கள் தமிழக ஆளுநருடன் சந்திப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆகியோர் இன்று (30.8.2017) காலை 11 மணிக்கு கிண்டி, ராஜ்பவனில் தமிழக ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்து,  தமிழக சட்டப்பேரவையை ...

Read More »

மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளை எதிர்த்து முழக்கமிடுவோம் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (23.08.2017) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மனம் பின்வருமாறு: மாநில செயற்குழு கூட்டத் தீர்மானம்: அதிமுக (அம்மா) பிரிவும், அதிமுக (புரட்சி தலைவி அம்மா)பிரிவும் அண்மையில் ஒன்றிணைந்துள்ளன. இவர்கள் பிரிந்த போதே, ...

Read More »