ஆசிரியர் 1

திருவண்ணாமலை பக்கிரிபாளையம் ஊராட்சியில் இஸ்லாமிய பெண்கள் கொலை மற்றும் பாலியல் தாக்குதல் தொடர்பான கடிதம் …

21.08.2017 பெறுநர் திரு. ஆசிரியர் அவர்கள், நாளிதழ் / தொலைக்காட்சி, சென்னை.   அன்புடையீர், வணக்கம். இத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், “திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் – பக்கிரிபாளையம் ஊராட்சியில் இஸ்லாமிய பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொலை மற்றும் பாலியல் தாக்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி” மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிட ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் வீடு,வீடாக பிரச்சாரம்

17-8-2017 மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் வீடு,வீடாக பிரச்சாரம் 71-வது சுதந்திர தின விழாவில் ஊழல் ஒழிப்பு, வகுப்புவாத எதிர்ப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி திட்டம் ஆகியவற்றால் வளமான இந்தியா உருவாகுமென பிரதமர் பேசியிருக்கிறார்.  ஆனால், நடப்பதோ நேர்மாறானது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டார்கள். சிறு,குறுதொழில்கள் பாதிக்கப்பட்டது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல ஜிஎஸ்டி வரித்திட்டம் அமலாக்கப்பட்டதால் அனைத்துப்பகுதி மக்களும்  பாதிக்கப்பட்டதோடு, சிறு,குறுதொழில்களும்  பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை ...

Read More »

மயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ராகப்பிரியாவையும் அவரது கணவரையும் மிருகத்தனமாக தாக்கிய ஆய்வாளர் அழகேசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், திருமதி திருமலை ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், திருமதி. ராகப்பிரியா மற்றும் அவர் கணவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

Read More »

சமூக வலைத்தளத்தில் அவமானப்படுத்துதல், மிரட்டுதல், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை இயக்குநருக்கு சிபிஎம் செயலாளர் எழுதியுள்ள கடிதம் ..

நித்தியானந்தாவின் சீடர்கள் என்று கூறிக் கொள்வோர் முகநூல் பக்கங்களில் கருணாவையும், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரையும், எங்கள் கட்சியின் தோழர்களையும் மிகவும் கேவலமான முறையில் சித்தரித்து எழுத்து மற்றும் வீடியோவாக முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.

Read More »

நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 28-ல் மறியல் போராட்டம்

தமிழக மாணவர்களின் உரிமை காத்திட நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Read More »

மாணவி வளர்மதி, கைப்பிரதி விநியோகித்த காரணத்தைக் காட்டி கைதுசெய்யப்பட்டிருப்பதும், குண்டர் சட்டம் போட்டிருப்பதும் – ஜனநாயக விரோதமான செயல்

மாணவி வளர்மதியை விடுவிப்பதுடன், போராட்டங்களை ஒடுக்கும் போக்கினை தமிழக அரசு கைவிடவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Read More »

கமலஹாசனை மிரட்டும் அமைச்சர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திரு.கமலஹாசன் அவர்களை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள் மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் திரு.கமலஹாசன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

Read More »

நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென கேட்டு மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 12 ஆர்ப்பாட்டம்

மாநிலம் முழுவதும் 2017, ஜூலை 12 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Read More »

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்த்து சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மத்திய அரசுக்கு 3 இல் ஒரு பங்கு வாக்கு இருக்கிறது. இது மாநிலங்களின் உரிமைகளை கடுமையாக பாதிக்கும். மாநிலங்கள் வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற வேண்டும். மத்திய அரசின் கையே கவுன்சிலில் ஓங்கி இருக்கிறது. வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களிடமிருந்து இப்பொழுது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு போய்விட்டது. ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை நாடாளுமன்றத்தின் இறுதி முடிவுக்கு உட்படுத்தாதது ஜனநாயக மறுப்பாகும்.

Read More »

சென்னையில் இயங்கும் செம்மொழி ஆய்வு மையத்தை சீர்குலைக்கக் கூடாது

7-7-2017 சென்னையில் இயங்கும் செம்மொழி ஆய்வு மையத்தை சீர்குலைக்கக் கூடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்   தமிழ், செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டு 2004ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பிறகு இதன் தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டன. முக்கியமான பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்க வேண்டுமென பணிக்கப்பட்டது. மாநில அரசின் வற்புறுத்தலுக்குப் பிறகு அதுவரையில் மைசூரில் இயங்கி வந்த ஆய்வு மையம் சென்னைக்கு மாற்றப்பட்டு 2008 முதல் சென்னையில் மத்திய தமிழ்ச்செம்மொழி ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்திற்கு மத்திய ...

Read More »