ஆசிரியர் 1

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 40ம் ஆண்டு விழா மாநாடு உட்பட தமுஎகசவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். தன்னுடைய கவிதைகளில் மக்கள் ஒற்றுமை, மதநல்லிணக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்திய அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

Read More »

தமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்

மக்களின் எழுச்சிக்கு மதிப்பளித்தும், சட்டமன்றத்தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படியும், தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Read More »

கால்நடை விற்பனை குறித்த மத்திய அரசின் புதிய சட்டவிதிகளுக்கு கண்டனம்

இந்திய மக்களுக்கு துயரம் இல்லாத ஒருநாளும் இருந்து விடக்கூடாது என்கிற வெறியோடு மத்திய அரசு 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தினத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்திய விவசாயிகளுக்கு மிகக்கடுமையான நஷ்டத்தையும், சமூக பதட்டத்தையும் , பொருளாதார இழப்புகளையும் உருவாக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென அனைத்து ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Read More »

துறைதோறும் துயரம்: மோடியின் மூன்றாண்டு ஆட்சி!

கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் முறையில் அருணாச்சலப் பிரதேசம், உத்தராகாண்ட்டில் ஆளுநர்களை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்தார்கள். புதுதில்லியிலும், பாண்டிச்சேரியிலும், தமிழகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை, அரசுகளை முடக்குவதற்கும், ஊனமாக்குவதற்கும், சிதைப்பதற்கும் ஜனநாயகத்திற்கு புறம்பாக ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள்.

Read More »

மேற்குவங்க இடதுசாரி ஊழியர்கள் மீது போலீஸ் தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மக்கள் நல கொள்கைகளை அமல்படுத்த வேண்டும், கிராமப்புற நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அமைதியாக பேரணி நடத்தியவர்கள் மீது கொடூரமானத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட மம்தா பானர்ஜி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

Read More »

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது!

21.05.2017 டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! வேலூர் மாவட்டம், அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய பெண்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அதிமுக 2016ம் ஆண்டு மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமலாக்குவோம் என்று அறிவித்து 1000 கடைகள் மூடப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ...

Read More »

மக்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மாநிலந்தழுவிய பிரச்சார – களப்போராட்டம்

மே 15 அன்று மாநில முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். மே 16 முதல் 21ம் தேதி வரை மாநில முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கம் உள்ளிட்ட களப்போராட்டங்கள் நடைபெறும்.

Read More »

அமைச்சர் சரோஜா மீது புகார் உரிய விசாரணை நடத்திடுக

ரூ. 30 லட்சம் மிரட்டி வாங்கியதாக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்றத்தினுடைய தலையீட்டினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

Read More »

நீட் தேர்வு எழுதிய மாணவ – மாணவிகளிடம் வரம்பு மீறிய சோதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பெற்றோர்கள் பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி தேர்வு எழுதாமல் தங்கள் பிள்ளைகளை திரும்பி அழைத்துச் சென்ற பரிதாபமும் நிகழ்ந்துள்ளது. உச்சநீதிமன்றமே ஆதார் கார்டை கட்டாயமாக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல மாணவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படாத கொடுமையும் நடந்திருக்கிறது.

Read More »

திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு

15.04.2017   திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு   தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் தொடர்கிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இப்பின்னணியில் திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.   நாளை (16.04.2017) நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது.   ...

Read More »