ஆசிரியர் 1

கிரானைட் ஊழல் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் உ.சகாயம் அறிக்கையை உடனே வெளியிடுக !

கிரானைட் கனிம வளச் சுரண்டல், தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடுகளிளேயே மிகப்பெரியதாகும். மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் குவாரிகள், சட்டவிரோத சுரண்டல் குறித்த விசாரித்த சிறப்பு விசாரணை அதிகாரி திரு. உ.சகாயம் அறிக்கை நீதிமன்றத்திடம் உள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படும் சில தகவல்கள் – மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. மிகப்பெரும் கூட்டுக்கொள்ளை அரங்கேறியிருப்பதைக் காட்டுகின்றன. ⦁ கிரானைட் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமல்லாது விவசாயம், நீர்நிலைகள், நினைவுச் சின்னங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப்புற பொருளாதாரமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ⦁ 1991 ...

Read More »

கிரானைட் குவாரி முறைகேடுகளை விசாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்குக!

தமிழகத்தில் கிரானைட் உட்பட கனிம குவாரிகளில் நடைபெற்றுவரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சனையில் சி.பி.ஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்து தொடர்ந்து போராடியும் வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியராக உ.சகாயம் ஐ.ஏ.எஸ் செயல்பட்டபோது கிரானைட் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளையால் அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது பற்றி விசாரணை அறிக்கை அனுப்பியிருந்தார். இப்பின்னணியில் மேற்கண்ட இயற்கை வளங்கள் கொள்ளை போவது குறித்து ஆய்வு ...

Read More »

இராமகோபாலன் வகுப்புவெறி அறிக்கை: சிபிஐ (எம்) கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான தோழர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இராமகோபாலன் வகுப்புவெறி அறிக்கை: சிபிஐ (எம்) கண்டனம் இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ...

Read More »

தமிழகத்தில் இடது ஜனநாயக அணி

இடதுசாரி சக்திகள் என்றால், ஏதோ ஒருவகையில் சோசலிசத்தை லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக, மார்க்சியம் மற்றும் விஞ்ஞான சோசலிசத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமென்பதை நிபந்தனையாக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களது திட்டத்தில் நிலப்பிரபுத்துவ, ஏகபோக, ஏகாதிபத்திய எதிர்ப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். அதேபோல் சமூக அடிப்படையில் சாதிய, ஆணாதிக்கப் பாகுபாடுகளை எதிர்க்கிற கண்ணோட்டம் இருத்தல் வேண்டும். தொழிலாளிகள், கிராமப்புற ஏழைகள், பல பகுதி உழைக்கும் மக்களின் நலனுக்குக் குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். மொத்தத்தில் மார்க்சிய லெனினிய கட்சி முதல் இடதுசார்புள்ள சமூக ஜனநாயகக் குழுக்கள் வரை இருக்கலாம்.

Read More »

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை

மாநிலங்களில் கட்சியின் நலன்களுக்கும் இடது ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவதற்கும் எங்கெல்லாம் உதவிகரமாக இருக்கின்றதோ அங்கெல்லாம் மத்தியக்குழு வகுத்தளிக்கும் அரசியல் - நடைமுறை உத்தியின் வரையறைக்கு உட்பட்டு பிராந்தியக் கட்சிகளுடன் பொருத்தமான தேர்தல் உத்தியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரலாம். ஆனால் அது அகில இந்திய அளவில் ஒரு கூட்டணிக்கான முடிவின் அடிப்படையில் திணிக்கப்படக் கூடாது. அவ்வாறு ஒரு தேர்தல் புரிந்துணர்வுக்கு செல்லும்போது, நாம் 17 ஆவது கட்சிக் காங்கிரசின் ஆய்வு அறிக்கை ஐக்கிய முன்னணி உத்தி குறித்து வரையறுத்துள்ள சரியான அணுகுமுறையை மனதில் கொள்ள வேண்டும்.

Read More »

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களை புறக்கணிக்கும் பாஜகவின் மோடி அரசை கண்டித்து தீர்மானம்

பாஜகவின் மோடி அரசு பதவி ஏற்றபின் புதிய ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப் போவதில்லை என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளித்து நிதி நிலை அறிக்கைகளில் சேர்க்கப்பட்ட திட்டங்களை முடிக்கவே முன்னுரிமை தரப்படும் என்றும் அறிவித்தது. நாடு முழுவதும் மக்கள் கோரிக்கைகளை ஏற்று பல புதிய ரெயில் பாதை, அகலப்பாதை, ரெட்டைப் பாதை திட்டங்களை ஆய்வு செய்து திட்ட மதிப்பு உட்பட முடிவு செய்யப்பட்ட பல திட்டங்களை கிடப்பில் போட்டு 2014 செப்டம்பர் 24 அன்று  அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தைப் பொறுத்த வரை அப்படிப்பட்ட ...

Read More »

ஐடி துறையில் ஆட்குறைப்பை தடுக்க சிபிஐ(எம்) தீர்மானம்

ஐடி துறையில் ஆட்குறைப்பை தடுக்கவும் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிபிஐ(எம்) தீர்மானம் தற்போது இந்தியா முழுவதும் தகவல் தொழில் நுட்பத் துறை (IT) மற்றும், தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் துறைகளில் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலும் 35 வயதுக்குட்பட்ட பொறியாளர்களே இத்துறையில் பணிபுரிகின்றனர். சமீபத்தில் டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ்) என்ற  இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம், 25 ஆயிரம் தொழிலாளர்களை வெளியேற்றி 50 ஆயிரம் ஊழியர்கள் ...

Read More »