செம்மொழி வாரத்தை கொண்டாடுக! மார்க்சிஸ்ட் எம்.பி.டி.கே.ரங்கராஜன் மீண்டும் வலியுறுத்தல்!

கடந்த 25-11-2014 அன்று மாநிலங்களவையில் திரு. டி.கே. ரங்கராஜன் எம்.பி., அவர்கள் சமஸ்கிருத மொழிவாரம் மாத்திரம் கொண்டாடுவதற்கு பதிலாக செம்மொழி வாரம் என்று கொண்டாடிட மத்திய அரசு முன்வர வேண்டும் என தனது சிறப்புரையில் கூறியிருந்தார்.

அதற்கு ஜூன் 10, 2015ல் பதில் அளித்திருந்த மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இராணி அவர்கள் மத்திய உயர்கல்வி ஆணையம் (CBSE), 1986ல் உள்ள தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாநில மற்றும் சமஸ்கிருத மொழியை ஊக்கப்படுத்துவது என்ற குறிக்கோளின் அடிப்படையில் இவ்வாரம் கொண்டாடப்படுவதை அழுத்தமாக கூறியிருந்தார்.

இதற்கு டி.கே.ரங்கராஜன் அவர்கள் தனது ஜூலை 2-ஆம் தேதியன்று அளித்துள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பது:

தங்களது ஜூன் 10, 2015 தேதியிட்ட செம்மொழிவாரம் சம்பந்தமாக எழுதிய பதில் கடிதம் கிடைத்தது. கடிதத்தில் நீங்கள் கூறியவைகளைப் பார்த்தேன். எனது சிறப்புரையில் மற்ற ஐந்து செம்மொழிகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஒடியா அவைகளோடு சமஸ்கிருத மொழியையும் இணைத்து செம்மொழி வாரம் என்று கொண்டாட மத்திய அரசு முன்வர வேண்டும் என்றே கூறியிருந்தேன்.

ஆனால் மாநிலம் மற்ற சமஸ்கிருத மொழிக்குக் கொடுக்கக்கூடிய அந்தஸ்தை தற்போது பேச்சு மொழியாக நிலவி வரும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதுமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற மொழிகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை பார்க்கும்போது மனவருத்தம் ஏற்படுகிறது. இம்மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழிக்கு சமமாக வரலாற்று சிறப்பு வாய்ந்ததும், செழுமை உள்ளதும் ஆகும். இருப்பினும் இவைகளுக்கான அந்தஸ்து இன்னும் தரப்படவில்லை.

மத்திய அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்ட அவசியம் இல்லை. ஏனெனில் நம்முடைய தேசிய கீதம் வங்காள மொழியில் உள்ளது. அதை நாம் பெருமையுடன் பார்க்கிறோம். சிந்து மொழி எந்த மாகாணத்திற்கும் சொந்தமற்ற மொழி. அது தற்போது நமது அரசியலமைப்பு சட்டத்தில் 8-வது பட்டியலில் உள்ளது. இதுவும் சரியே.

ஆகவே நமது மொழிகள் பற்றிய நிலையில் பல்வேறு நிலைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அரசால் அறிவிக்கப்பட்ட செம்மொழிகளை உள்ளடக்கி ‘செம்மொழி வாரம்’ என்பதை அரசே கொண்டாடிட முன்வருவதில் எவ்வித சிக்கலும் இருக்க முடியாது.

கடைசியாக நமது பெரும்பான்மை மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியது மொழி போன்ற விஷயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் எந்தவித பாரபட்சமான அணுகுமுறையும் அமைதியின்மையை ஏற்படுத்திவிடும். ஆகவே, அரசு இவ்விஷயத்தில் மக்களை ஒற்றுமைப்படுத்திட முன்வர வேண்டும்.

இப்படிக்கு,

/ஒப்பம்

/ (டி.கே. ரங்கராஜன்)

மாநிலங்களவை உறுப்பினர்-தமிழ்நாடு


 02-07-2015

Dear.Smt. Smriti Zubin Irani,

CELEBRATION OF SANSKRIT WEEK

I thank you for your kind response to my special mention on “Celebration of Classical Language week” by your letter dated 10-06-2015     While I have taken note of the content of your said letter, may I bring to your kind attention that I emphasised in my special mention the need for treating all the four other classical languages viz., Tamil, Telugu, Kannada , Malayalam and Odiya along with Sanskrit as celebration of Classical Language week by the Central Govt itself.

It is matter of agitation because while so much credence is given to a stateless language Sanskrit, the languages which are the lingua franca of the states and are being declared as classical languages are not equally placed. These languages are equally rich in literary value and historicity, but still they are not given the place they deserve.

The Central Government need not be averse to such an Idea of celebrating classical languages week for our National anthem is in Bengali Language and we are proud of it. Sindhi Language, even though does not belong to a state has been declared rightly as one of the languages in the VIII Schedule. When such diverse situations are prevailing on matters relating to languages, I hope the suggestion of celebrating a “classical languages week” for the languages that has been declared so by the Govt may not be difficult to implement. Finally, I hope you are aware that it is an emotional issue among vast sections of people of our country. It is to be noted that any discriminatory treatment amongst languages will cause disharmony among the people. The Govt should come forward on this matter which will unify the people.

Thanking you,

Yours Sincerely,

T.K.Rangarajan M.P.,

(Rajayasabha )

Smt. Smriti Zubin Irani,

Minister for Human Resource Development,

Room No 301, “C” Wing,

Shastri Bhawan,

New Delhi – 110 115

Check Also

பட்ஜெட் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி…

உண்மையை அப்பட்டமாக்கும் தென்னக ரயில்வேயின் விளக்கம்சு.வெங்கடேசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு மத்திய பட்ஜெட்டில் தென்னக இரயில்வேயில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ...