மாவட்டங்கள்

பார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரம்மாள்புரம் பதைக்கம் காலனியை சார்ந்த வேல்முருகன், சுபாஷ், சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பதைக்கம் காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வீணடித்தும், மாசுபடுத்தியும் வந்த குகானந்தம், ராஜகோபால், பிரேம் ஆனந்த் மூவரையும் பதைக்கம் காலனியை சார்ந்த தலித் மக்கள் தண்ணீரை பாழடிக்காதீர்கள் என்று சொன்னதற்காக ...

Read More »

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் 5, ஹைஸ்கூல் தெருவீரகேரளம்புதூர் தென்காசி மாவட்டம் அலைபேசி எண்: 9677590708 தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25/2020) காவல் துறையினரின் தாக்குதலால் உள்ளுருப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 27.6.2020 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது இறப்பு முழுக்க முழுக்க வீகேபுரம் காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவால் நடந்ததுள்ளது. கடந்த 10.6.2020 அன்று குமரேசனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ...

Read More »

வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்!

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம், செல்லரபாளையத்தைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சியின் நிருபராக உள்ள திரு.கண்ணன் (அருந்ததியர்), மே 24 அன்று, அவருடைய ஊரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வருவதாய் இருந்த திருமணம் கொரோனா தொற்று பரவல் நிலையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செல்லரபாளையத்திற்கு வந்த அமைச்சர், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, அவருடன் வந்தவர்களை தூண்டிவிட்டு தாக்கச் செய்ததாக நிருபர் கண்ணன் காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார். ...

Read More »

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 7,000த்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எல்&டி போன்ற ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் வேலை செய்து வருகிறார்கள். இதில் 6000 பேர் வடமாநில தொழிலாளர்கள். இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பித்த இந்த காலத்தில் கூடங்குளம் ...

Read More »

மின்சார ஊழியர்களின் தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அஞ்சலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட தோழர் எஸ்.முத்துக்குமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். தோழர் எஸ்.முத்துக்குமாரசாமி தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தை சார்ந்தவர். விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ் இயக்க மூத்த தலைவருமான டி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களின் மூலம் கட்சியில் உறுப்பினார். 1973ல் மின் ...

Read More »

சிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் மீது பட்டப்பகலில் உள்ளூர் எதிரிகளுடன் சேர்ந்து கூலிப்படையினரால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு கொலை செய்ய முயற்சித்த சமூக விரோதிகளையும், திட்டமிட்டு துணைபோனவர்களையும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை வட்டம் ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.வேல்முருகன். சிபிஎம் ஊழியர். கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காகவும், ஆதிக்க சக்திகளை எதிர்த்தும் செயல்பட்டு வருகிறது. ...

Read More »

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்து மே 22 ஆம் தேதி மக்கள் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். அப்போது அங்கு காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பின்னர் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூட உத்தரவிட்டது. பின்னர் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தேசிய ...

Read More »

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், பேராசிரியர் பொன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, கே.ஸ்ரீராம், பி.ராஜகுரு ஆகியோர் மசு பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து தடையை நீக்க வலியுறுத்தினர். பெறுநர் உயர்திரு துணைவேந்தர் அவர்கள், மசு பல்கலைக்கழகம், திருநெல்வேலி. மதிப்பிற்குரிய துணைவேந்தர் அவர்களுக்கு, வணக்கம். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சார்ந்த ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் ம.சு.பல்கலைக்கழகம் பெரும் பங்காற்றியுள்ளது. அதன் பொருட்டே இப் பல்கலைக்கழகம் ...

Read More »

குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காண்ணிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ(எம்) மனு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 30.11.2017 அன்று ஏற்பட்ட ஓக்கி புயலின் எதிரொலியாக கனமழையும் சூறைகாற்றும் வீசியது.இதனால் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. நூறு ஆண்டு காலத்தில் காணாத புயல் இது. புயல் பற்றிய முன்னெச்சரிக்கை இல்லாமையால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். எத்தனை பேர் மீன் பிடிக்க சென்றனர், இதில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர், இறந்து போனவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் கூட அரசால் அறுதியிட்டு தெரிவிக்க முடியவில்லை. அமைச்சைர்கள் ஒரு எண்ணிக்கையும் அதிகாரிகள் ஒரு எண்ணிக்கையும் கூறி மக்களை குழப்புகின்றனர். ...

Read More »

குவியல் குவியலாக மக்கள் வெளியேற்றம்: சென்னையிலேயே அடுக்குமாடி வீடுகள்: #CPIM வலியுறுத்தல்.

தற்போது, மக்கள் குடியிருக்கக்கூடிய இடங்களில் அல்லது அதற்கு அருகாமையில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். 50 மீட்டருக்கு வெளியே உள்ள வீடுகளை அகற்றும் சட்டவிரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். அந்தந்தப்பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கவுன்சிலர்களும் அரசின் இந்த முடிவை எதிர்த்து குரல் எழுப்புவதுடன் நகர்ப்புற ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

Read More »