கரூர்

வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்!

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம், செல்லரபாளையத்தைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சியின் நிருபராக உள்ள திரு.கண்ணன் (அருந்ததியர்), மே 24 அன்று, அவருடைய ஊரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வருவதாய் இருந்த திருமணம் கொரோனா தொற்று பரவல் நிலையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செல்லரபாளையத்திற்கு வந்த அமைச்சர், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, அவருடன் வந்தவர்களை தூண்டிவிட்டு தாக்கச் செய்ததாக நிருபர் கண்ணன் காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார். ...

Read More »

சிபிஎம் கரூர் மாவட்ட மாநாடு உற்சாகத்துடன் துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட 7வது மாநாடு ஞாயிறன்று க.பரமத்தியில் தோழர்.ஆர்.உமாநாத் நினைவரங்கில் (கொங்கு நாடு திருமண மன்றம்) உற்சாகத்துடன் துவங்கியது. மாநாட்டிற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.இளங் கோவன், நந்தினி ஆகியோர் தலைமை வகித்தனர்.தோழர் பஞ்சப்பட்டி மாணிக்கத் தின் நினைவு ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் கே.துரைராஜ் பெற்றுக்கொண்டார். கட்சியின் மூத்ததலைவர் ஜி.ரத்தின வேலு செங்கொடியை ஏற்றிவைத்தார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் து.ரா.பெரியதம்பி வரவேற்றுப் பேசி னார். மாநாட்டை ...

Read More »