மாவட்டங்கள்

குவியல் குவியலாக மக்கள் வெளியேற்றம்: சென்னையிலேயே அடுக்குமாடி வீடுகள்: #CPIM வலியுறுத்தல்.

தற்போது, மக்கள் குடியிருக்கக்கூடிய இடங்களில் அல்லது அதற்கு அருகாமையில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். 50 மீட்டருக்கு வெளியே உள்ள வீடுகளை அகற்றும் சட்டவிரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். அந்தந்தப்பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கவுன்சிலர்களும் அரசின் இந்த முடிவை எதிர்த்து குரல் எழுப்புவதுடன் நகர்ப்புற ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

Read More »

NPHH அட்டைகளை PHH அட்டைகளாக மாற்ற கோரி மாதர் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்.

NPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டைகளாக மாற்றக் கேட்டும், ரேஷன் பொருட்கள் விலை உயர்வை ரத்து செய்யவும், ரேஷன் திட்டத்தை முடக்க முயலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ரெகுபதி முன்னிலை  வகித்தார். சி.பி.ஐ(எம்) மாவட்ட செயலாளர் என்.முருகேசன் வாழ்த்தி ...

Read More »

நெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்

இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் செய்தி வெளியிட்ட மூன்று பத்திரிக்கையாளர்கள் மீது பணகுடி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோ குழு ஒன்று பாளையில் ஏற்பட்ட பிளவை சோதனை செய்து, ஆய்வுக்கு சில பகுதிகளை எடுத்து சென்றுள்ளனர். இஸ்ரோ மூலம் எந்த புகாரும் காவல்துறைக்கு கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் இந்த வழக்கு காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்பட்ட நடவடிக்கை என பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பேச்சுரிமை, ...

Read More »

கம்யூனிஸ்ட்டுகளே மகத்தானவர்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கே.ராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியும், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கம்யூனிஸ்டுகளின் பாதை என்பது தியாகத்தால் உருவாக்கப்பட்டது. அது சுயநலமில்லாததாகும். ‘ஒருவர் தன்னுடைய நலனுக்காக மட்டுமே பாடுபடுவதென்றால் அவர் ஒரு வேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞனாக விளங்கலாம். ஆனால் ஒரு பொழுதும் முழு மனிதனாக ஆக முடியாது. உண்மையிலேயே முழு மனிதனாக ...

Read More »

முழுமையாக, சீராக குடிநீர் வழங்ககோரி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுக, குடிநீருக்கான மே 9 இயக்கத்தில் பங்கேற்றிடுக

மே 1 அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் முழுமையாகவும், சீராகவும் குடிநீர் வழங்க வேண்டுமென்றும், தாமிரபரணி தண்ணீரை கோக் பெப்சி நிறுவனங்களுக்கு வழங்க நிரந்தர தடை விதிக்க கோரியும் தீர்மானங்களை நிறைவேற்ற மக்கள் நலன் சார்ந்த கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. மாவட்டம் முழுவதும் பல தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்த போதிலும், போதுமான தண்ணீரோ, ஒப்புக்கொள்ளப்பட்ட தண்ணீரோ வழங்கப்படுவதில்லை. சங்கரன்கோவில் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு ...

Read More »

சாமளாபுரம் தாக்குதல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கம் போராட்டம்

சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மறியல் செய்த பெண்களை திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணிற்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவறிழைத்த காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து, சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை தர்மபுரியில் நிறைவடைந்த மாதர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்ட முடிவுப்படி சாமளாபுரம் பகுதிக்குரிய மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ...

Read More »

சூறையாடப்படும் தென்பெண்ணை… தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்… விழுப்புரத்தில் மே 4ல் மாநில செயலாளர் ஜி.ஆர் தலைமையில் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதை தீர்த்திடக் கோரியும்,, இதற்கு காரணமான தென்பெண்ணையாற்று மணல் கொள்ளையை தடுத்து நீராதாரங்களை பாதுகாக்கக் கோரியும் மே 4ஆந்தேதி திருக்கோவிலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு, தெற்கு மாவட்டக்குழுக்கள் சார்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ஏப்ரல் 11 செவ்வாயன்று தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடைபெறும் பல இடங்களை நேரில் ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையிலான ஆய்வுக்குழு பல்வேறு அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளை சந்திக்க ...

Read More »

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கை: சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை: திருப்பூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவும் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சனையை சமாளித்து மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டிருக்கும்நிலையில் நீராதாரம் குறைந்து மக்களுக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ...

Read More »

சிபிஐ(எம்) புதுச்சேரி பிரதேசக்குழு நெல்லிதோப்பு தொகுதி தேர்தல் குறித்த நிலைபாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், புதுச்சேரி பிரதேசக்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் தோழர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர். கே.பாலகிருஷ்ணன், தமிழ்மாநில குழு உறுப்பினர் வி.பெருமாள், பிரதேச செயலாளர் தோழர் ஆர். இராஜாங்கம் உள்ளீட்ட பிரதேச செயற்கு பிரதேச குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் புதுச்சேரி நெல்லித்தோப்பு  தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக விவாதித்து கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தலாகும். இத்தொகுதியில் ஆரம்பம் முதலே மிகப்பெருமளவில் பணம், பொருள் வழங்கப்பட்டு ...

Read More »

குமரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு 17.10.2016 காலை ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது எனக் கூறி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக்ககாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது எனக் கூறி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து 17-10-2016 காலை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியலை மக்கள் நலக் கூட்டணி முழு ஆதரவு கொடுக்க முடிவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலளார் என்.முருகேசன்ம மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மாவட்டச் செயலாளர் ...

Read More »