மாவட்டங்கள்

வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் – மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் ஆய்வு

கோவை, செப். 25 – இந்து முன்னனி பிரமுகர் படுகொலையை பயன்படுத்தி நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும், நடைபெற்ற சேதம் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஞாயிறு அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடந்த வியாழனன்று இந்து முன்னனி அமைப்பைச்சார்ந்த சசிக்குமார் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சங்பரிவார அமைப்புகள் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் ஏராளமான சொத்துக்கள் சேதமாகியது. மேலும், இந்த திட்டமிட்ட வன்முறையால் பலர் தங்களது வாழ்வாதாரம் முடக்கப்பட்டு தெருவில் ...

Read More »

மதவெறியர்களை விரட்டுவோம் – கோவையை காப்போம் அனைத்து கட்சியினர் சூளுரை

கோவை, செப். 24 – வன்முறை வெறியாட்டத்தை கட்டுப்படுத்தாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்த சூழலில் மதவெறியர்களை புறக்கணித்து  கோவை மக்கள் ஜனநாயகத்தை பாதுகாத்தார்கள், கோவையை பாதுகாக்க ஓரணியில் நிற்போம் என்று அனைத்து கட்சியின் தலைவர்கள் சூளுரையேற்றனர். இந்து முன்னனி அமைப்பை சேர்ந்த சசிகுமார் என்பவர் வியாழந் அன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் சங்பரிவார அமைப்புகள்  வன்முறை கும்பல்கள் சசிக்குமார் கொலைக் பயன்படுத்தி மத அரசியலை வைத்து ஆதாயம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இதனால் அப்பாவி பொதுமக்கள் கடும் ...

Read More »

தனியார் சிப்ஸ் ஆலையை அகற்றக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர், ஆக.10: விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் தனியார் சிப்ஸ் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் வத்தல் நெடியால் கடும் அவதிப்படுவதால், அந்த ஆலையை உடனே அகற்ற வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். விருதுநகர் நகராட்சி 22 வது வார்டுக்கு உட்பட்டது பிள்iயார் கோவில் தெரு. இங்கு 500க்ம் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில்,    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில்  சிப்ஸ் தயாரிக்கும் ஆலை தொடங்கப்பட்டது. ...

Read More »

கிரானைட் மலையை பேச்சில் மறைக்க முடியாது !

21 ஆண்டு கிரானைட் கொள்ளைக்கு திமுக-அதிமுக இருவருமே பொறுப்பு (29.04.2016 அன்று மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளார் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை)  மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, கிரானைட் முறைகேடு பற்றிய விசாரணையில் அதிமுகதான் நடவடிக்கை எடுத்ததென்று கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிரானைட் முறைகேடு குறித்து முதலில் உத்தரவிட்டது திமுகதான் என்று புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விசாரணையை வெளிக்கொண்டுவந்தது யார் ? ...

Read More »

2016 பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல் சிபிஐ(எம்) – வேட்பாளர்கள்

பாண்டிச்சேரியில் போட்டியிடும் சிபிஐ (எம்) வேட்பாளர்கள் திருபுவனை (தனி) – எல். கலிவரதன் டி.ஆர். பட்டிணம் – முகமது தமீம் அன்சாரி லாஸ்பேட்டை – ஏ. ஆனந்த் பாகூர் – பி. சிவகாமி (பெண்)

Read More »

மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் 28-03-2016 அன்று குமரியில்!!!

மக்கள் நலக் கூட்டணியின் மாநிலத் தலைவர்கள் மாற்று அரசியல் எழுச்சி பிரச்சாரப ;பயணத்தை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர். சுமார் 24 மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துவிடடு, ஐந்தாவது கட்டமாக குமரி மாவட்டம் வருகின்றனர். 28-03-2016 மாலை நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு ...

Read More »

விடுதலைப் போராட்ட தியாகப் பரம்பரையினர் தேசத் துரோகிகளா?​ பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 1 – வீரஞ்செறிந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் தியாகப் பரம்பரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு ...

Read More »

மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் குளச்சல் துறைமுக திட்டத்தை அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும்!!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு தீர்மானம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.உஷாபாசி தலைமையில் பார்வதிபுரம் சிபிஐ(எம்) அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் குளச்சல் துறைமுகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு இயற்கை வழங்கிய பரிசு குளச்சல் கடல் பகுதி. மிகவும் ஆழமான பகுதியாகும். இங்கு இயற்கையான துறைமுகம் அமைந்து உள்ளது. பிரிட்டீஷ்காரர்கள் காலத்திலேயே குளச்சல் துறைமுகம் செயல்பட்டு வந்தது. குளச்சல் துறைமுகம் வழியாக மாவட்டத்தில் உற்பத்தியாகும் ...

Read More »

4-3-2016 மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் திரள் ஆர்ப்பாட்டம்!!!

மக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் நாகர்கோவில் நகரச் செயலாளர்கள் ஆலோசனை; கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.முருகேசன் தலைமையில் வெட்டூர்ணிமடம் சிஐடியு அலுவலகத்தில் டைபெற்றது.கூட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல், சிபிஐ மாவட்டச்செயலாளர் எஸ்.இசக்கிமுத்து,விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் பு.திருமாவேந்தன்,மேற்கு மாவட்டச் செயலாளர் மத்தூர் ஜெயன்,சிபிஐ வி.கோபி,மதிமுக கிறிஸ்ஜெரால்டு, சிபிஐ(எம்) எஸ்.அந்தோணி, வி.சி.க அம்பேத்கார் வளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவு எடுக்கப்பட்டது: மாவட்டத்தில் நீண்டகாலமாக சாலைகள் ரணக்குழிகளாக உள்ளன. பல்வேறுகட்சிகள் பல்வேறு அமைப்புகள் கிராம மக்கள்; பல போராட்டங்களைநடத்தியுள்ளனர். இதன் ...

Read More »

பாதாள சாக்கடை திட்டம் குறித்து முறையான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துக!!!

நாகர்கோவில் நகராட்சியில் சுமார் 110 கி.மீ அளவுக்கு பாதாளச்சாக்கடைத் திட்டப்பணி நடைபெற்று வருகிறது. சுமார் 3 வருடங்களாக வேலை நடைபெறுகிறது. வேலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை நகராட்சி என்பது நரக ஆட்சியாக மாறி மாவட்ட மக்களை அலங்கோலப்படுத்துகிறது. எந்த தெருவிலும் மக்கள் நடந்து செல்லவோ, இருச்சக்கரம் மற்றும் கார்களில் செல்லவோ முடியாது. தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. மூடியப்பகுதிகளும் முழுமையாக மூடப்படவில்லை. வாகனங்கள் புதைக்குழிக்குள் சிக்கி தத்தளிப்பது தினம், தினம் கண்கொள்ளா காட்சியாக மாறிவிட்டது. நகராட்சி நிர்வாகத்தை நினைத்து மக்கள் தலையில் போட்டு அடித்துக் ...

Read More »