மாவட்டங்கள்

தோழர் எம்.சீரங்கன் மறைவு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், கட்சியில் சேலம் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராகவும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த எம்.சீரங்கன் காலமானார். இவர் சமீப சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பில் வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் 13.02.2015 இரவு 09.30 மணி அளவில் தனது 90 வது வயதில் மேட்டூர் ஆர்எஸ் கருமலைக் கூடல் தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் மேட்டூரில் பியட்செல் மில்லில் தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கியவர். மேட்டூர் மில்லில், மேட்டூர் கெமிக்கல்ஸ்சில், ...

Read More »

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் வெளியீட்டு விழா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாட்டையொட்டி புத்தக வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. திங்கள் மாலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் தங்கமணி வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். என்.குணசேகரன் எழுதிய “விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்” என்ற நூலை மாவட்டக்கழு உறுப்பினர் வெ.மன்னார் வெளியிட, அரசு ஊழியர் சங்க நிர்வாகி சந்துரு பெற்றுக் கொண்டார்.

Read More »

தமிழர் வளர்த்த தத்துவங்கள்: நூல் வெளியீட்டு விழா!

2015 பிப். 7 இல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் அவர்கள் எழுதிய “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தோழர் என்.குணசேகரன் நூலை வெளியிட்டார். வரலாற்று பேராசிரியர் ஜெகஜீவன் ராம் நூலை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர்கள் நந்தகோபால், சுகுமாறன், சமூக ஆர்வலர் தனுஷ்கோடி, எல்.என்.ஜி கல்லுரி மாணவி சிவசங்கரி, கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பன்னீர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கோபால் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Read More »

செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: சிபிஐ(எம்) கண்டனம்

செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: அரசியல் கட்சிகளின் ஜனநாயக குரல் வலைய நெறிக்கும் கோவை மாநகர காவல்துறை நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம்; மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கூட்டம் 27.1.2015ம்தேதி காந்திபுரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதித்துள்ள கோவை மாநகர காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, கோவை மாநகரம், முன்பு ...

Read More »

விசைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.15/- மின் கட்டண உயர்வை ரத்து செய்க!

கோவை மாவட்டக்குழுவின் பத்திரிகைச் செய்தி; விசைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.15/- மின் கட்டண உயர்வை ரத்து செய்திட  தமிழக அரசிற்கு சிபிஐ(எம்) கோரிக்கை; கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது, பல்லாயிரக்கணக்கானோருக்கு  வேலை வாய்ப்பையும். பொருளாதரத்தில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தி வரும் விசைத்தறி தொழில்.  தற்போது துணி தேக்கம் மற்றும்முள்ள பல்வேறு காரணங்களால் தொழில் நெருக்கடியில் இருந்து வருகிறது. இந்த நிலைமையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் விசைத்தறி கூடங்களுக்கு 15 சதவீத மின் கட்டண ...

Read More »

ஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிபிஐ(எம்) வடசென்னை மாவட்டக்குழுவின் பத்திரிகைச் செய்தி; இந்திய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் வருகை தர உள்ளார். ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டிற்கு சென்று வருவதும், சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் உலக மரபு ஆகும். ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வருவதில் உள்நோக்கம் உள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளும் தேசபக்தி உள்ள அனைவரும் ஒபாமா வருகையை ஆட்சேபிக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தையை அகல திறந்துவிட வேண்டும் ...

Read More »

திருச்சி அரசு மருத்துவமனை சீர்கேடுகளைக் கண்டித்து சிபிஐ(எம்) தொடர்ந்து 5 நாள் பட்டினிப் போராட்டம்!

திருச்சி அரசு மருத்துவமனை சீர்கேடுகளைக் கண்டித்து சிபிஐ(எம்) தொடர்ந்து 5 நாள் பட்டினிப் போராட்டம்.

Read More »

கோவை மாவட்டக்குழுவின் 21 ஆவது மாநாடு துவங்கியது!

மாநாட்டு வளாகத்திலுள்ள செங்கொடியை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் யு.கே.வெள்ளிங்கிரி அவர்கள் ஏற்றி வைத்தார்.

Read More »

கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு இல்லம் திறப்பு!

கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு இல்லம் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கோவை மாவட்டக்குழுவின் 21 ஆவது மாவட்டக்குழு மாநாட்டு ஜோதிப் பயணமும் சின்னியம்பாளையம் தியாகிகள் இல்லத்திலிருந்து துவங்கியது.

Read More »

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்டம் முழுவதும் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Read More »