மாவட்டங்கள்

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்டம் முழுவதும் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Read More »

விழுப்புரம் மாவட்டக்குழு மாநாடு எழுச்சியுடன் துவக்கம்!

விழுப்புரம் டிச. 30 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 21-வது மாநாடு விழுப்புரத்தில் தோழர் என்.வரதராஜன் நினைவரங்கத்தில் 29-ந்தேதி காலை எழுச்சியுடன் துவங்கியது. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி மாநாட்டுக் கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாநாட்டுத் தலைமைக்குழுவாக வீ.இராதாகிருஷ்ணன், ஏ.சங்கரன், வே.உமாமகேஸ்வரி, எம்.செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கே.கலியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஜி.துரை வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சிகளிலும் ...

Read More »

மதுரை மாநகர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 21- வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் தொடங்கியது. தியாகிகள் நினைவு ஜோதி, கொடி பெறும் நிகழ்ச்சி பேண்ட் வாத்திய முழக்கத்தின் மத்தியில் எழுச்சிகரமாக நடைபெற்றது. பி.எம்.குமார்,வி.பால கிருஷ்ணன் நினைவுக்கொடியை பயணக்குழுவிடமிருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.எம். ஜோசப், மதுரை தியாகிகள் நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.செல்லம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். செம்படை அணிவகுப்பு 21- வது மாநாட்டைக் குறிக்கும் வகையில் 21 பேர் செங்கொடிகளை ஏந்தி நிற்க, செம்படை அணிவகுப்புக்கு மத்தியில் கட்சியின் ...

Read More »

கடலூர் மாவட்ட மாநாட்டுக் காட்சிகள்!

கடலூர் மாவட்ட மாநாட்டுக் காட்சிகள்!

Read More »

மதுரை புறநகர் மாவட்ட மாநாடு கொடியேற்றத்தோடு துவங்கியது

மதுரை புறநகர் மாவட்ட மாநாடு இன்று காலை கொடியேற்றத்தோடு துவங்கியது.

Read More »

தூத்துக்குடி மாவட்ட மாநாட்டுப் பேரணி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மாநாட்டுப் பேரணி கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா முன்பிருந்து துவங்கி நடைபெற்றது. பேரணியில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.மல்லிகா உட்பட ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

Read More »

கூடன்குளத்தில் 3,4வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் துவக்கம் சிபிஐ(எம்) திருநெல்வேலி மாவட்டக்குழு கண்டனம்

கூடன்குளத்தில் 3வது 4வது அணு உலைகள் அமைக்கும் பணி மார்ச்சில் தொடங்கப்பட உள்ளது என அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ரூ 39,746 கோடி செலவில் 3வது, 4வது அணு உலைகள் நிறுவப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணு உலை பூங்காக்களை அமைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இது மக்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும். இந்தியாவில் 2020க்குள் 40,000 மெகாவாட் திறன் உள்ள அணு உலைகளை ...

Read More »

சிபிஐ(எம்) சிவகங்கை மாவட்டக்குழு மாநாடு துவக்கம்!

சிவகங்கை, டிச. 17 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட 21-வது மாநாடு காரைக்குடியில் புதனன்று தொடங்கியது. மாநாட்டுக் கொடியை மூத்த தோழர் சி. சுப்பிரமணி ஏற்றினார். முன்னதாக சிவகங்கை மாவட்டம் நயினாங்குளத்திலிருந்து தோழர்கள் அ.சண்முகம், அ.ஆறுமுகம் நினைவாக கொண்டுவரப்பட்ட செங்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பெற்றுக் கொண்டார்.கண்டர மாணிக்கத்திலிருந்து தியாகி ராமனாதன் நினைவாக கொண்டுவரப்பட்ட கொடிக்கம்பத்தை மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் பெற்றுக்கொண்டார். மானா மதுரையிலிருந்து தோழர் முருகன் நினைவாக கொண்டுவரப்பட்ட ஜோதியைமணி பெற்றுக் கொண்டார். கண்டர மாணிக்கத்திலிருந்து ...

Read More »

நாமக்கல் மாவட்டக்குழு மாநாடு!

குமாரபாளையம், டிச 17- குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நம்பியுள்ள ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்கவும் விரைந்து இடம் தேர்வுசெய்து பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட மாநாடுதீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட 6வது மாநாடு தோழர் என்.வரதராஜன் நினைவரங்கில் செவ்வாயன்று துவங்கியது. மாநாட்டிற்கு கே.தங்கமணி, எஸ்.நடராஜன் மற்றும் சம்பூரணம் ஆகியோர் தலைமை வகித்தனர். என்.சக்திவேல் கொடியேற்றினார். வரவேற்புக்குழு தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு ...

Read More »

வடசென்னை மாவட்டக்குழு மாநாட்டின் தீர்மானங்கள்!

சென்னை, டிச.16- சென்னை அம்பத்தூரில் சிபிஎம் வடசென்னை மாவட்ட மாநாடு டிச.14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தோழர்கள் ஆதினமிளகி, எம்.வரதன் அரங்கில் நடைபெற்றது. தீர்மானங்கள் சென்னை மாநகரில் சாமான்ய மக்களின் கருத்துகளை உரிமைகளாக இருந்த பொது கூட்டம், தெருமுனை கூட்டம், ஆலைவாயில் கூட்டம் நடத்துவது கோரிக்கை பலகைகள் வைப்பது, ஜனநாயக பூர்வ இயக்கங்கள் நடத்துவது உள்ளிட்ட இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பதை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிப்போருக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும், சென்னை பகுதி மக்களை ...

Read More »