மாவட்டங்கள்

பா.ஜ.க. அரசின் கொள்கைகளைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

“மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் கொள்கைகளைக் கண்டித்து”, சிபிஐ(எம்), சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்.எல்.), எஸ்யூசிஐ., ஏஐஎப்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள், திண்டுக்கல்லில் 15.12..2014 அன்று சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) மாவட்டக்குழுச் செயலாளர் தோழர் என்.பாண்டி, சி.பி.ஐ. மாவட்டக்குழுச் செயலாளர் தோழர் க.சந்தானம், சி.பி.ஐ.(எம்.எல்) மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

வடசென்னை மாவட்டக்குழு மாநாடு எழுச்சியுடன் துவக்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழுவின் 21 ஆவது மாநாட்டு துவக்கம். டிச 14,15,16 நடைபெற உள்ள மாநாட்டை கட்சியின் மூத்த உறுப்பினர் வி.முருகைய்யன் செங்கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.

Read More »

சிபிஎம் கரூர் மாவட்ட மாநாடு உற்சாகத்துடன் துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட 7வது மாநாடு ஞாயிறன்று க.பரமத்தியில் தோழர்.ஆர்.உமாநாத் நினைவரங்கில் (கொங்கு நாடு திருமண மன்றம்) உற்சாகத்துடன் துவங்கியது. மாநாட்டிற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.இளங் கோவன், நந்தினி ஆகியோர் தலைமை வகித்தனர்.தோழர் பஞ்சப்பட்டி மாணிக்கத் தின் நினைவு ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் கே.துரைராஜ் பெற்றுக்கொண்டார். கட்சியின் மூத்ததலைவர் ஜி.ரத்தின வேலு செங்கொடியை ஏற்றிவைத்தார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் து.ரா.பெரியதம்பி வரவேற்றுப் பேசி னார். மாநாட்டை ...

Read More »

சிபிஎம் திருநெல்வேலி மாவட்ட மாநாடு துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட 21-வது மாநாடு சங்கரன் கோவிலில் ஞாயிறன்று துவங்கியது. கட்சிக் கொடியை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.ராஜாங்கம் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் மஹால் வரை பிரதிநிதிகள் ஊர்வலமாகச் சென்றனர். மாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, தி.கணபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜகுரு , தங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக்குழு தலைவர் முத்துப் பாண்டியன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மாநாட்டை ...

Read More »

தென்சென்னை 21 ஆவது மாவட்ட மாநாடு துவக்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட 21வது மாநாடு ஞாயிறன்று விருகம்பாக்கம் கோல்டன் பேரடைஸ் மண்டபத்தில் துவங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். அருகில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் உள்ளனர்.

Read More »