திருவண்ணாமலை

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் வெளியீட்டு விழா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாட்டையொட்டி புத்தக வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. திங்கள் மாலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் தங்கமணி வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். என்.குணசேகரன் எழுதிய “விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்” என்ற நூலை மாவட்டக்கழு உறுப்பினர் வெ.மன்னார் வெளியிட, அரசு ஊழியர் சங்க நிர்வாகி சந்துரு பெற்றுக் கொண்டார்.

Read More »

தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை முடக்க முயற்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து

தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை முடக்க முயற்சிக்கும் மோடி அரசைக் கண்டித்தும், சட்டப்படி 100 நாள் வேலை வழங்கக்கோரியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். சேத்துப்பட்டு வட்டாரத்தில் மனுக்கொடுக்க செங்கொடிகளை ஏந்தி அணிவகுத்த தொழிலாளர்கள்.

Read More »