விழுப்புரம்

சிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் மீது பட்டப்பகலில் உள்ளூர் எதிரிகளுடன் சேர்ந்து கூலிப்படையினரால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு கொலை செய்ய முயற்சித்த சமூக விரோதிகளையும், திட்டமிட்டு துணைபோனவர்களையும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை வட்டம் ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.வேல்முருகன். சிபிஎம் ஊழியர். கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காகவும், ஆதிக்க சக்திகளை எதிர்த்தும் செயல்பட்டு வருகிறது. ...

Read More »

சூறையாடப்படும் தென்பெண்ணை… தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்… விழுப்புரத்தில் மே 4ல் மாநில செயலாளர் ஜி.ஆர் தலைமையில் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதை தீர்த்திடக் கோரியும்,, இதற்கு காரணமான தென்பெண்ணையாற்று மணல் கொள்ளையை தடுத்து நீராதாரங்களை பாதுகாக்கக் கோரியும் மே 4ஆந்தேதி திருக்கோவிலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு, தெற்கு மாவட்டக்குழுக்கள் சார்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ஏப்ரல் 11 செவ்வாயன்று தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடைபெறும் பல இடங்களை நேரில் ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையிலான ஆய்வுக்குழு பல்வேறு அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளை சந்திக்க ...

Read More »

விழுப்புரம் மாவட்டக்குழு மாநாடு எழுச்சியுடன் துவக்கம்!

விழுப்புரம் டிச. 30 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 21-வது மாநாடு விழுப்புரத்தில் தோழர் என்.வரதராஜன் நினைவரங்கத்தில் 29-ந்தேதி காலை எழுச்சியுடன் துவங்கியது. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி மாநாட்டுக் கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாநாட்டுத் தலைமைக்குழுவாக வீ.இராதாகிருஷ்ணன், ஏ.சங்கரன், வே.உமாமகேஸ்வரி, எம்.செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கே.கலியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஜி.துரை வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சிகளிலும் ...

Read More »