விருதுநகர்

தனியார் சிப்ஸ் ஆலையை அகற்றக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர், ஆக.10: விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் தனியார் சிப்ஸ் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் வத்தல் நெடியால் கடும் அவதிப்படுவதால், அந்த ஆலையை உடனே அகற்ற வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். விருதுநகர் நகராட்சி 22 வது வார்டுக்கு உட்பட்டது பிள்iயார் கோவில் தெரு. இங்கு 500க்ம் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில்,    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில்  சிப்ஸ் தயாரிக்கும் ஆலை தொடங்கப்பட்டது. ...

Read More »

மதவெறியின் அபாயங்கள் – தோழர் உ.வாசுகி

விருதுநகர், நவ,23,- அருப்புக்கோட்டையில் மக்கள் ஒற்றுமை காத்திட, இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்க்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் தலைமையேற்றார். போஸ்பாண்டியன் அறிமுக உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் ஆனந்தன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் கலைவேந்தன், மதிமுக நகரச் செயலாளர் மணிவண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் செயதில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் காத்தமுத்து ஆகியோர் மதவெறி, சாதி வெறிக்கு எதிராக கருத்துரையாற்றினர். நூல் ...

Read More »

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 3 அன்று 5 ஆயிரம் கையெழுத்துக்கள்

மத்தியில் உள்ள  மோடி அரசு, அவசர சட்டத்தின் மூலம்  விவசாயிகளின் நலன்களுக்கு   விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை கண்டித்து தமிழகம் முழுவதும், அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து  5 கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் துவங்கியது. இதில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ...

Read More »