ஆவணங்கள்

தாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்!

தமிழகம் மட்டுமே இந்தி திணிப்பை எதிர்ப்பதாக செய்யப்படும் பொய்ப் பிரச்சாரத்தை இது தவிடுபொடியாக்கும். தாய்மொழிகளைக் காக்க இதோ பார், தென்னகமே எழுந்து நிற்கிறது என்று பறைசாற்றப் போகிறது இந்த மாநாடு. இதில் பங்கேற்பதும், ஆதரவு தருவதும் தாய்மொழிப் பற்றுள்ள ஒவ்வொருவரின் உரிமை, கடமை.

Read More »

22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 ஆவது அகில இந்திய மாநாடு வரைவு அரசியல் தீர்மானம் (கொல்கத்தாவில் 2018 ஜனவரி 19-21 தேதிகளில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது) நமது கட்சியின் 21 ஆவது அகில இந்திய மாநாட்டுக்குப் பின்னர் உள்ள காலத்தில் இந்தியாவில் வலதுசாரி அரசியல்  மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நான்கு முனைகளில் தனது கடுமையானத் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது; நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை ...

Read More »

கறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி

பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு சீத்தாரம் யெச்சூரியின் பாராளுமன்ற உரை ‘கறுப்புப்பணம்; ஜெய்ஹிந்த் அல்ல…. ஜியோஹிந்த்”

Read More »

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான மாநிலக் கட்சிகளுடன் நீண்ட காலமாக கட்சி கூட்டணி வைத்து வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில், கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Read More »

மக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை

மக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை முன்னுரை உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக திகழும் இந்தியாவில் தமிழ்நாடு, தனிச்சிறப்புக்குரிய மாநிலமாக விளங்குகிறது. தொன்மை வாய்ந்த நதிக்கரை நாகரீகம், பண்பாட்டுக் கூறுகளை தன்னகத்தே கொண்டு ஓங்கி உயர்ந்து நின்ற பெருமை தமிழ் இனத்திற்கு உண்டு. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மொழி தமிழ் என்ற பெருமையும், உலகப் பொதுமறையாம் திருக்குறளை தரணிக்கு தந்து பெரும்புகழையும் கொண்டது தமிழ்நாடு. “அகிலும் தேக்கும் அழியாக்குன்றம் அழகாய் முத்துக் குவியும் கடல்கள் முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய் முல்லைக்காடு ...

Read More »

கட்சித் திட்டம்

I. அறிமுகம் II. தற்கால உலகில் சோசலிசம் III. சுதந்திரமும் அதற்குப் பின்னரும் IV. அயல்துறைக் கொள்கை V. அரசு கட்டமைப்பும் ஜனநாயகமும் VI. மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும் VII. மக்கள் ஜனநாயக முன்னணியைக் கட்டுதல் VIII. கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுதல் I – அறிமுகம் 1.1 இந்திய மக்களின் முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, புரட்சிகரப் பாரம்பரியத்தை கம்யூனிஸ்ட் கட்சி தன்னகத்தே கொண்டுள்ளது. ரஷ்யாவில் நிகழ்ந்த அக்டோபர் சோசலிசப் புரட்சியினால் ஈர்க்கப் பட்ட உறுதிமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் சிறிய குழு ஒன்று 1920ல் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியது. கட்சி துவக்கப்பட்டது முதலே பூரண ...

Read More »

மக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை

மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை எதிர்ப்போம் இந்திய நாட்டில் கால்நூற்றாண்டுக்கு மேலாக மத்திய அரசு கடைபிடித்து வரும் உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் தமிழ்நாட்டிலும் மக்கள் வாழ்விலும், மாநில நலனிலும் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட இக்கொள்கைகளை நரேந்திர மோடி அரசும் தீவிரமாக அமலாக்கி வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், மக்கள் நலனுக்கும் விரோதமாக பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இக் கொள்கைகளை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை மக்கள் நலக் கூட்டியக்கம் முன்னெடுத்துச் செல்லும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை ...

Read More »

தமிழகத்தில் இடது ஜனநாயக அணி

இடதுசாரி சக்திகள் என்றால், ஏதோ ஒருவகையில் சோசலிசத்தை லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக, மார்க்சியம் மற்றும் விஞ்ஞான சோசலிசத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமென்பதை நிபந்தனையாக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களது திட்டத்தில் நிலப்பிரபுத்துவ, ஏகபோக, ஏகாதிபத்திய எதிர்ப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். அதேபோல் சமூக அடிப்படையில் சாதிய, ஆணாதிக்கப் பாகுபாடுகளை எதிர்க்கிற கண்ணோட்டம் இருத்தல் வேண்டும். தொழிலாளிகள், கிராமப்புற ஏழைகள், பல பகுதி உழைக்கும் மக்களின் நலனுக்குக் குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். மொத்தத்தில் மார்க்சிய லெனினிய கட்சி முதல் இடதுசார்புள்ள சமூக ஜனநாயகக் குழுக்கள் வரை இருக்கலாம்.

Read More »

அரசியல் தீர்மானம்: 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

CPIM 21st Congress

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தீர்மானம்  (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது) 1.1    இந்திய நாட்டில் கடந்த கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு பெரும் அரசியல் மாற்றம் நடந்தேறியுள்ளது. மத்தியில் பாஜக அரசாங்கம் அமைந்ததானது, இந்திய அரசியலில் வலதுசாரிப் போக்கை நோக்கிய நகர்வு உறுதிப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. அது புதிய தாராளமய முனைப்பையும், இந்துத்வா உந்துதலையும் ஏகாதிபத்திய ஆதரவு கண்ணோட்டத்துடன் வலுவாய் ஒன்றிணைக் கின்றது. அப்பட்டமான பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளில் இதன் தாக்கத்தை காண ...

Read More »

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை: 21ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

CPIM 21st Congress

மக்களவைத் தேர்தல் குறித்து ஜூன் 2014 இல் ஆய்வு செய்த மத்தியக்குழு, கட்சி சில காலமாக முன்னேற்றம் காண இயலவில்லை. என்றும் இது கட்சிக்கு கிடைத்துள்ள மோசமான தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது என்றும் முடிவுக்கு வந்தது. எனவே நான்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்தது.

Read More »