மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம்: டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் அளித்துள்ள பதில்

20.3.2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் அவர்கள், தமிழ்நாட்டில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் பிரச்சனை சம்பந்தமாக மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திரா பிரதான் அவர்கள் அளித்துள்ள பதிலை கீழே தந்துள்ளோம்.


20.3.2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மாநிலங்களவையில்;

  1. மீத்தேன் வாயு எடுப்பதற்கு அளிக்கப்பட்ட உத்தரவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மனு காவேரி டெல்டா விவசாயிகள் சங்கத்திடமிருந்து அரசுக்கு கிடைத்துள்ளதா?
  2. அப்படி கிடைத்திருந்தால் அதன் மீது அரசின் நடவடிக்கை என்ன?

என்று எழுப்பிய கேள்விக்கு;

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.

ஆம். வந்துள்ளது. காவேரி டெல்டாவில் உத்தேசிக்கப்பட்டுள்ள மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரதமர் அவர்களுக்கு எழுதப்பட்ட முறையீடு தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் மூலம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பெறப்பட்டுள்ளது.

திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தினருக்கு மீத்தேன் எடுப்பதற்கு தமிழ்நாட்டில் மன்னார் குடி ஏரியாவில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அனுமதியளிக்கப்பட்டது.

மேற்படி நிறுவனம் தேவையான ஆவணங்களை இதுநாள் வரை சமர்ப்பிக்கவில்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நினைவூட்டப்பட்ட பிறகும் அவர்கள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதற்கான காலம் 3.11.2013 அன்றோடு முடிந்துவிட்டது. ஒப்பந்தக்காரர் இந்தப் பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை. ஒப்பந்த ஷரத்துகளின் படி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* * *

GOVERNMENT OF INDIA

MINISTRY OF PETROLEUM & NATURAL GAS

RAJYA SABHA

UNSTARRED QUESTION NO. 1549

TO BE ANSWERED ON 11.03.2015

MEMORANDUM FOR STOPPING EXTRACTION OF CBM BY ONGC

  1. SHRI T. K. RANGARAJAN:

Will the Minister of PETROLEUM AND NATURAL GAS be pleased to state:

  1. whether Government has received a memorandum from Cauvery Delta Farmers’ Association urging stoppage of extraction of Coal Bed Methane (CBM) by Oil and Natural Gas Corporation; and
  2. if so, the reaction of Government thereto?

ANSWER

MINISTER OF STATE IN THE MINISTRY OF PETROLEUM & NATURAL GAS(INDEPENDENT CHARGE)

(SHRI DHARMENDRA PRADHAN)

(a) & (b): Yes, Sir. A memorandum addressed to the Hon’ble Prime Minister regarding the proposed Coal Bed Methane Extraction Project in the Cauvery Delta submitted by the All Farmers Organization Committee,Thanjavur, Nagapattinam and Thiruvarur has been received in the Ministry of Petroleum & Natural Gas through Secretary to Governor, Government of Tamil Nadu.

M/s Great Eastern Energy Corporation Limited (GEECL) was awarded one CBM block, namely, MG-CBM-2008/IV, measuring an area of 667 sq. km., in the State of Tamil Nadu, for exploration and exploitation of CBM gas in Mannargudi area.

The contractor has not submitted the requisite documents viz. Bank Guarantee (BG), Financial Performance Guarantee (FPG) etc. as required under the contract till date despite notice issued by the Ministry of Petroleum & Natural Gas (MoP&NG). The exploration phase-I expired on 03.11.2013 and the contractor has not initiated any exploration activity in the block. Action for cancellation of the contract has been initiated as per the provisions of CBM contract.

In the State of Tamil Nadu, no block has been awarded to Oil and Natural Gas Corporation (ONGC) for exploration and exploitation of Coal Bed Methane.

* * *

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...