மோடி அரசு இரண்டாண்டுகளில் செய்தது என்ன?

முன்னுரை

மோடி அரசாங்கம் கடந்த ஈராண்டுகளில் எந்த அளவிற்கு சாதனைகள் புரிந்திருக்கின்றன என்று மக்களை நம்பச் செய்வதற்காக பொதுப் பணத்தை ஏராளமாகச் செலவு செய்து கொண்டிருக்கிறது. என்னதான் இவர்கள் பகட்டாரவாரத்தோடு இதனைக் கொண்டாடியபோதிலும், இவர்களின் உறுதிமொழிகளுக்கும் எதார்த்த நிலைமைகளுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளியை அல்லது சாரமின்மையை மறைக்க முடியவில்லை. மேலும் நாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சிக்கு உள்ளாகி அங்கேயுள்ள மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதையும் இவர்களால் மறைக்க முடியவில்லை. வறட்சிக்கு உள்ளான மாவட்டங்களுக்கு மத்திய அரசு எவ்வித உதவியும் செய்திடாமல் அம்மாவட்ட மக்களை ஏமாற்றிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகைகளை அளித்தது தொடர்பாக பிரதமர் மோடி அறிவித்தவை தவறான விவரங்கள் என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி உ.பி. மாநில கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலுவைத் தொகை. 700-800 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது என்று கூறிய அதே சமயத்தில், நிலுவைத் தொகை 5,795 கோடி ரூபாய் என்று பதிவேடுகள் காட்டுகின்றன. “பொய்கள், மேலும் பொய்கள் அதன் பெயர் புள்ளிவிவரங்கள்“ என்கிற பழைய முதுமொழியை இப்போது “பொய்கள். மேலும் பொய்கள் அதன் பெயர் மோடிபேச்சு” என்று மாற்றி விடலாம். விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், வேலைகள் உருவாக்கப்படுதல், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் மோடி அரசாங்கம் சொல்பவை உண்மை அல்லாதவை அல்லது பாதி பொய்களாகும்.

பிரதமர் மோடி கூறிடும் மாபெரும் சாதனை என்ன தெரியுமா? தங்கள் அரசாங்கத்தில் கடந்த ஈராண்டுகளில் எவரும் லஞ்சம் வாங்கவில்லை என்பதாகும். இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல். மகாராஷ்ட்ராவில் நில பேரங்களில் சம்பந்தமான மோடிகேட் ஊழல் ஆகியவற்றில் சிக்கிக் கொண்ட பாஜகவினரைக் காப்பாற்றும் வேலைகளும் நடக்கிற்து. லஞ்சத்திற்கு எதிராகவுள்ள லோக் பால் மற்றும் இதர சட்டங்கள் கடந்த ஈராண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. இதுதொடர்பாக குஜராத் மாடல் பின்பற்றப்படுகிறது. அங்கே கடந்த பத்தாண்டுகளாக லோக் அயுக்தா சட்டம் அமலில் இல்லை. கறுப்புப்பண பேர்வழிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டிருக்கின்றன. நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் செயல்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

மோடி ஆட்சியின் கடந்த ஈராண்டு கால ஆட்சியின் கீழ் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள மோசமான அம்சங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன.

கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மோடி ஆட்சியின் மூன்று முகங்கள் குறித்து எழுதியுள்ள கட்டுரையுடன் இக்கட்டுரைத் தொகுப்புகள் ஆரம்பமாகின்றன.

அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் மீதான தாக்குதல்கள், விவசாயிகள் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கு எதிராக பாஜக தொடுத்தள்ள யுத்தம். பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் எப்படியெல்லாம் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன, தலித், பழங்குடியினர் மற்றும் பெண்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டிருப்பதை கட்டுரையாளர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

விலைவாசி உச்சத்தில், விவசாயம் பள்ளத்தில் …
விலையேற்றத்தால் யாருக்கு லாபம்?
வறுமைக்கு என்ன மருந்து?
சுகாதாரத் துறையின் நிலை என்ன?
தலித், பழங்குடியினர், பெண்கள் …

அதேபோன்று மாணவர்களுக்கு எதிராக மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களும் கட்டுரையாளர்களால் நன்கு தோலுரித்துக்காட்டப்பட்டிருக்கிறது.

வேலையின்மை வளர்கிறது
பணக்காரர்களுடன், பணக்காரர்களின் வளர்ச்சிக்காக …
கண்களையும் காதுகளையும் திறக்கவும், மிஸ்டர் மோடி
ஊழல் எதிர்ப்பு சாத்தியமானதா?
முதல் பலியானது ஜனநாயகம்

இறுதிக் கட்டுரை மோடி ஒரு ராஜதந்திரியில்லை என்பதையும் தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறது.

இச்சிறுபிரசுரத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் நாடு முழுதும் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்பிரசுரம் வெளிவர பல தோழர்கள் தங்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாகத் தோழர்கள் சவெரா, ஷ்யாம், விஜு கிருஷ்ணன், சுனந்த், சுபாஷினி அலி, சோனாலி, டாக்டர் அமித் சென் குப்தா, பிரபீர் புர்கயஸ்தா, பிரஞ்சால் மற்றும் முரளி தரனுக்கு மத்திய வெளியீட்டுக்குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பிருந்தா காரத்,

உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு,

சி.பி.ஐ.எம்.

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...