பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்: சிபிஐ(எம்) கண்டனம்!

புதிய தலைமுறை அலுவலகத்தில் குண்டு வீச்சு; பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்;

இன்று (மார்ச் 12) காலை சுமார் 3 மணி அளவில் இரண்டு பைக்குகளில் வந்த நபர்கள் புதிய தலைமுறை தொலைகாட்சி அலுவலக வளாகத்திற்குள் இரண்டு குண்டுகளை வீசி தாக்கியிருக்கிறார்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது இது மூன்றாவது முறை நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

கடந்த மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தையொட்டி ஒளிபரப்ப இருந்த நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக அலுவலகத்திற்கு வந்து ஒளிப்பதிவாளரை தாக்கியதோடு, கேமிராவை உடைத்தனர். ஒரு பெண் நிருபரையும், தலைமை செய்தியாளரையும் அந்த கும்பல் தாக்கியது. இதனுடைய தொடர்ச்சியாகவே, இன்று (12-03-2015) அதிகாலை புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தை குண்டு வீசி தாக்கியுள்ளனர்.

கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய நோக்கத்தோடு சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி மீதும், தொலைக்காட்சியில் பணியாற்றுகிறவர்கள் மீதும் தொடுத்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட வன்முறையாளர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...