தன் அலுவலகத்திற்கு தானே குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள்…

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அமைதியான சமூகத்தில் வேர் பிடிக்கவும் முடியாது வளரவும் முடியாது.எனவே அமைதியான எந்த சமூகத்தையும் அமைதியற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் மாற்றுவதன் மூலமாகவே வேர் பிடிக்கிறது. இதுதான் இந்தியா முழுவதும் வளச்சிக்காக அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை. இதற்கு இன்னொரு உதாரணம் தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக வெடிகுண்டு நிகழ்ச்சி.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இரவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது. தென்காசியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு புரியும். இந்து, முஸ்லிம் சமூகங்களிடையே அடிக்கடி மோதல்களும் பதற்றமும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊர் அது. 2007 ஆம் ஆண்டில் அத்தகைய மோதலில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள்.

2008 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வெடித்த பின்னர் அந்த அலுவலகத்தில் முஸ்லிம்கள் அணியும் தொப்பி ஒன்று கிடந்தது. அதாவது அந்த அலுவலகத்திற்குள் குண்டு வைத்தவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்று நினைக்கவேண்டும் என்பதற்காகவே குண்டு வைத்தவர்கள் இதை செய்திருந்தார்கள்.

இந்த செய்தி அறிந்ததும் முஸ்லிம்கள் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வைத்து விட்டார்கள் என்ற செய்தியை சங்பரிவார் அமைப்புக்கள் தீயாகப் பரவச்  செய்தார்கள். இரு சமூகங்களுக்கிடையே சந்தேகமும் பதற்றமும் பற்றி கொண்டது.முஸ்லிம் இளைஞர்கள் பலர் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளானார்கள். அதன் பிறகு திருநெல்வேலி சரக டிஐஜி  ஆக இருந்த திரு கண்ணப்பன்  ஐ.பி.எஸ்., நேரடியாக விசாரணையில் இறங்கினார். விசாரணையின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். ரவிக்குமார் பாண்டியன், குமார் , நாராயண தர்மா  ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் மூவரும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகளாக செயல்பட்டவர்கள்.

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் தனது அலுவலகத்திற்கு தானே குண்டு வைப்பானா? இன்னொரு சமூகத்தை சார்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில் குண்டு வைத்து விட்டார்கள் என்றால் எத்தனை உயிர்கள் கொல்லப்படும்! எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்படும்! எப்போதும் இணைக்க முடியாத பிளவு ஏற்படும் என்று தெரிந்து அந்த நோக்கத்திற்காகவே அவர்கள் இதை செய்திருக்கிறார்கள்.இதை தனிப்பட்ட நபர்களின்  செயலன்றோ அல்லது தவறாக வழிநடத்தப்பட்ட ஒருவரின் செயலன்றோ சொல்ல முடியாது. ஏனெனில் ஆர் எஸ்எஸ் இதை தனது கொள்கையாகவே வைத்திருக்கிறது. இப்படி செய்வதற்காகவென்றே அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள் இது தான் ஆர்.எஸ்.எஸ்.

Check Also

கேரளாவில் நடக்கும் அரசியல் கொலைகளைக் குறித்து அருண் ஜேட்லிக்கு ஒரு திறந்த மடல்

மதிப்பிற்குரிய அருண் ஜேட்லிக்கு, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள். எங்கள் மாநிலத்திற்கு ...