Tag Archives: அதிமுக

எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தக் கூடாது! – கே. பாலகிருஷ்ணன்

எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கோடு இச்சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்வது, சிறையிலடைப்பது இச்சட்டத்தின் நோக்கத்திற்கே விரோதமானதாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வழக்கறிஞர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சாதிய ரீதியாக யாரையும் இழிவுபடுத்துகிற நிகழ்வுகளையும், கருத்துக்களையும் உறுதியாக எதிர்த்து குரல் கொடுத்து ...

Read More »

பள்ளி மாணவி உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்! விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். கடந்த 10 ந்தேதி அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் ...

Read More »

உப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ! – கே.பாலகிருஷ்ணன்.

2020-21 நிதிநிலை அறிக்கை தமிழக அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். இது மாதிரியான வாய்ப்பினை மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்கு தமிழக மக்கள் வழங்கமாட்டார்கள் என்பதை இந்த பட்ஜெட் உரை தெளிவாக்குகிறது. மக்களுக்கான நலத் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வேலையின்மை அகில இந்திய சராசரியை விட அதிகமாக இருக்கும் போது அதுகுறித்து பாராமுகமான பட்ஜெட்டாகவே இது உள்ளது. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கில் சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து ...

Read More »

பேனர் சரிந்து இளம் பெண் மரணம் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சிபிஐ(எம்) கண்டனம்!

ஆளும் கட்சியினரின் அராஜக, அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளால் ஏற்பட்ட இளம்பெண் சுபஸ்ரீயின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More »

கமலஹாசனை மிரட்டும் அமைச்சர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திரு.கமலஹாசன் அவர்களை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள் மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் திரு.கமலஹாசன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

Read More »

“கொள்முதல்” அரசியலை முறியடித்து கொள்கை அரசியலை முன்னெடுப்போம்!!

தமிழக மக்கள் நலனுக்கான மாற்று உருவாவதை யாரும் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது...

Read More »

‘மது அடிமைத்தனத்திற்கு எதிராக மனித நேயமுள்ளோர் குரலெழுப்புவோம்’

மது அடிமைத்தனத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு, உடல் பாதிப்பு, உளவியல் பாதிப்புகளால் ஏழைக் குடும்பங்கள் துன்புறுகின்றன. தற்போது பள்ளி மாணவர்கள், குழந்தைகள் வரை இந்த சீர் கெட்ட நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Read More »

மாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)

17-3-2015 மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன்  வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...

Read More »