Tag Archives: அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வரம்பு அதிகரிப்பு அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 58 லிருந்து 59 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது எவ்விதத்திலும் பொருத்தமானது அல்ல. இந்த நடவடிக்கையின் மூலமும், ஏற்கனவே அவர்களுடைய அகவிலைப்படி முடக்கம் உள்ளிட்ட ஏற்பாடுகளின் மூலமும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு மிச்சப்படுத்துகிறது. மத்திய அரசிடம் பல்வேறு வகையினங்களில் மாநிலத்துக்கு வர வேண்டிய  தொகையையும், நிவாரண நிதியையும் போராடி பெறுகிற துணிச்சல் அற்ற அரசாக, மாநில உரிமைகளை காவு கொடுக்கும் அரசாக, ஊழியர்கள் ...

Read More »

விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை – என்ற நம்பிக்கையோடு மேம்பட்ட பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அதிர வைக்கக்கூடிய பேரணிகளும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களுமாக மே தின விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அவரவர் இருந்த இடத்திலேயே, இப்போதிருக்கும் இடர்பாடு நீங்க உலகிற்கு மாற்றாக எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னுலகை உருவாக்குவதற்கான சூளுரையை ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் சுருண்டு கிடக்கிறது. ...

Read More »

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்க வேண்டும்..!

தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-    குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்கி முடிப்பது தொடர்பாக… கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் ஆயிரமும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்குவது என அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 2ம் தேதி ...

Read More »

கொரோனா தடுப்பு நடிவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்! கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நடமாட்டத்திற்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம். நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது மட்டும்தான் இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்து நம்மையும் மற்றவர்களையும் பேராபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே, நம்மை இந்த வைரஸ் தாக்காது, நமக்கு எந்த நோயும் வராது என்ற நம்பிக்கையில் ...

Read More »