Tag Archives: ஆசிரியர்கள்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளரைச் சந்தித்து சிபிஐ(எம்) கோரிக்கை மனு

பெறுநர்                 மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,                 தமிழ்நாடு அரசு,                 தலைமைச் செயலகம்,                 சென்னை – 600 009. தமிழ்நாடு அரசு தலைமைச்செயலாளர்  அவர்கள் வழியாக இன்று நேரில் சந்தித்து அளிக்கப்பட்டது. வணக்கம். பொருள்:-       கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் – மருத்துவ சிகிச்சை – ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்  – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக… நோய்தொற்று மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அடுத்து ...

Read More »

விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை – என்ற நம்பிக்கையோடு மேம்பட்ட பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அதிர வைக்கக்கூடிய பேரணிகளும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களுமாக மே தின விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அவரவர் இருந்த இடத்திலேயே, இப்போதிருக்கும் இடர்பாடு நீங்க உலகிற்கு மாற்றாக எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னுலகை உருவாக்குவதற்கான சூளுரையை ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் சுருண்டு கிடக்கிறது. ...

Read More »