Tag Archives: ஆர்எஸ்எஸ்

சர்வதேச மகளிர் தினம்: சிபிஐ(எம்) வாழ்த்து1

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே’ என்ற பாரதிதாசனின் வரிகள், சமுதாயத்தின் சரிபாதி விடுதலை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் அனைத்துவித பாகுபாடுகளையும் களைவதற்கான போராட்டங்களுக்கு சொந்தக்காரர்கள் என்ற முறையில் உலகெங்கிலும் உயர்ந்த லட்சியத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் பெண்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்நாளில் தன் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. முதலாளித்துவத்தின் இன்றைய முகமான நவீன தாராளமயம் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும் வாழ்வாதாரத்துக்கும் எதிராக யுத்தம் நடத்துகிற காலம் இது. பொருளாதார பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி ...

Read More »

மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தினம்!

ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரத்தின் மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராயி விஜயன் உரையாற்றினார்.

Read More »

சிறுபான்மை மக்களை உறுதியுடன் பாதுகாப்போம்!

பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி, டிச.6:- பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், வழக்கை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில் ...

Read More »