Tag Archives: இட ஒதுக்கீடு

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அறிவித்தது. இதனை எதிர்த்து, இந்திரா சஹானி என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்படோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டுமென தீர்ப்பளித்தது. அதே சமயம் இந்த சலுகையினை பெறுவதற்கு வருமான வரம்பினை (கிரிமிலேயர்) தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதன்படி வருமான வரம்பினை தீர்மானிப்பதற்கு நீதிபதி ராம் நந்தன் பிரசாத் அவர்கள் ...

Read More »

மருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-     மருத்துவப் படிப்பு இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்துவது தொடர்பாக… இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விடுதலைக்கு முன்பாகவே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வந்தது. இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஊறு ஏற்படும் போதெல்லாம் தமிழகம் ...

Read More »

சிபிஐ(எம்) செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (15.7.15)

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிடவும், போரூர் ஏரியை பாதுகாத்திட வலியுறுத்தியும் சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

Read More »