Tag Archives: இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் மறைவுக்கு கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா ஆழ்ந்த இரங்கல்

தோழர் கே.வரதராஜன் திடீர் மறைவு, விவசாயிகள் இயக்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாபெரும் பேரிழப்பாகும். அவர் திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் சங்க, விவசாய தொழிலாளர் சங்கத்தை துவக்கி தமிழ்நாடு முழுவதிலும் அவர் அந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக அரும்பாடுபட்டார். அதனுடைய விளைவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினுடைய தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் நீண்ட காலம் செயல்பட்டார். அவருடைய விவசாய சங்கத்தின் அரும்பணியானது அகில இந்திய அளவில் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு கட்சி அவரை உயர்த்தியது. அந்த பொறுப்பிலும் அவர் அகில இந்திய ரீதியில் விவசாயிகள் இயக்கத்திற்கு சீரிய ...

Read More »

மின் ஊழியர் மத்திய அமைப்பின் நீண்ட கால நிர்வாகி தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

எம்எம்எஸ் என்று தோழர்களால்  அன்போடு அழைக்கப்படும் தோழர் மீனாட்சிசுந்தரம்  விக்ரமசிங்கபுரம் பஞ்சாலை போராட்டத்தில்  தோழர் ஏ.நல்லசிவன் அவர்களோடு கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தோழர் மீனாட்சி சுந்தரம் நீண்ட நெடுங்காலமாக மின்சார ஊழியர் சங்கத்திலும், மின்சார ஊழியர் மத்திய அமைப்பு மற்றும்  இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் மிக முக்கியமான பங்கினை ஆற்றியவர். பணி ஓய்வுக்குப் பிறகும் இடதுசாரி இயக்கத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 99 வயதை அடைந்து அடுத்த 6 மாத காலத்தில் ...

Read More »

மூத்த பத்திரிகையாளர் ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் ‘தி இந்து’ நாளேட்டின்’வாசக ஆசிரியராக’ இருந்தவருமான ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Read More »