Tag Archives: ஊழல்

தமிழக அரசே, ஒப்பந்த பணிகளுக்கு அவசரமாக டெண்டர் விடும் ஏற்பாட்டை ரத்து செய்!

இருக்கும் நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்து – ஆசிரியர் அரசு ஊழியர் உரிமைகள் மீது கை வைக்காதே! உலகமே கொரோனா தாக்கத்தால் ஸ்தம்பித்து நிற்கும்போது, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கு டெண்டர் விடும் ஏற்பாட்டை தமிழக அரசு மே மாதம் செய்ய உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.5000 கோடிக்கு மேல், பொதுப்பணித்துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் பெறுமானமுள்ள பணிகள் இதில் உள்ளடங்கும். இந்தப் பணிகள் அனைத்தும் கொரோனா தாக்கத்திற்கு ...

Read More »

கமலஹாசனை மிரட்டும் அமைச்சர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திரு.கமலஹாசன் அவர்களை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள் மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் திரு.கமலஹாசன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

Read More »

எல்லாம் மூடு மந்திரம்: ஏலம் போடுவதற்கான தந்திரம்

இன்று முதல் நடைபெறும் உதவிப் பொறியாளருக்கான நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களை வெளிப்படையாக இடஒதுக்கீட்டு பிரிவின் அடிப்படையில் வெளியிட்ட பிறகு நேர்முகத்தேர்வை நடத்த வேண்டுமென்றும், தகுதியானவர்களை நேர்மையான முறையில் நியமனம் செய்யும் வகையிலும் வெளிப்படைத் தன்மையோடு இந்த நியமனங்கள் நடைபெற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்துகிறது.

Read More »

நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார் பிரதமர்

#ManMadeDisaster என்ற ஹேஷ்டேக் உடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் பற்றி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய பதிவின் 10 அம்சங்கள்: மோடியின் பண மதிப்பு நீக்க அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சனைகளின் விளைவை அலசுவதற்கு இந்த ஒரு மாதம் என்பது சரியான கால அளவாக இருக்கும். ஊழல், பயங்கரவாதம், கள்ளப் பணம் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிப்பதுதான் இலக்குகள் என்று மோடி தன் அறிவிப்பில் குறிப்பிட்டார். இந்த இலக்குகள் அனைத்துமே தோல்வி என்பது ...

Read More »

மோடியின் ஈராண்டு: மூன்று முகங்கள் !

– சீத்தாராம் யெச்சூரி பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு 2016 மே 26 அன்று இரு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு முடிவுற்ற சமயத்தில், இந்த அரசாங்கத்தின் கீழ் ஒரு புதிய ‘திரிமூர்த்தி’ செதுக்கப்படுகிறது என்ற எச்சரிக்கையை விடுத்தோம். அந்த மூன்று முகங்கள் எப்படிப்பட்டவை? 1 இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தை ஆர்எஸ்எஸ் கூறிவரும் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆக மாற்றுவதற்கான முயற்சிகளில் கொடூரமான முறையில் ஈடுபடுவது. 2 ...

Read More »

மோடியின் ஈராண்டு: ராஜ தந்திரியா?

–பிரபீர் புர்கயஸ்தா பிரதமர் மோடி கடந்த ஈராண்டுகளில் பல மைல்கள் பறந்திருந்த போதிலும், சுமார் 40 நாடுகளுக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோதிலும், இவற்றால் சாதித்தது என்ன என்று பார்த்தோமானால் அநேகமாகஒன்றுமே இல்லைஎன்பதேயாகும். சற்றே நுணுகி ஆராய்ந்தோமானால், நடைமுறையில் அமெரிக்காவின் அடிமையாக மாறியிருப்பது தெரிய வரும். அமெரிக்கா சமீபத்தில் அவர்களது நாடாளுமன்றத்தில் ஒருதீர்மானம் கொண்டு வந்தது. அதில் இந்தியாவை, நேட்டோ நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நம் நாட்டின் வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்தைஅமெரிக்காவின் ராணுவம் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய விதத்தில் நீண்டகாலமாக நிலுவையில் ...

Read More »

மோடியின் ஈராண்டு: ஊழல் எதிர்ப்பு சாத்தியமானதா?

கருப்பில் மறையும் முதலைகள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது நரேந்திரமோடி மக்களுக்கு அளித்த வாக்குறு திகளை நம்மில் ஒருசிலராவது நினைவுவைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர், நாட்டு மக்களிடம் நாங்கள் ஆட் சிக்கு வந்தால் …“லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் வாங்குவதற்கு யாரையும் அனுமதிக்கவும் மாட்டோம்,’’என்று வாக்குறுதி அளித்தார். இப்போதும்கூட அதையேதான் அவரும் அவரது தொண்டரடிப் பொடிகளும் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் உண்மை என்ன?லஞ்ச ஊழலைத் தடுப்பதற்கான கொள்கைகள் சட்டரீதியாக நிறைவேற்றப் பட் டாக வேண்டும். ஆனால் மோடியின் அரசாங்கத்தில் அதற்கு நேர் எதிர்மாறாகத் தான் ...

Read More »

மோடியின் ஈராண்டு: பணக்காரர்களுடன், பணக்காரர்களின் வளர்ச்சிக்காக …

-ஷ்யாம் பிரதமர் நரேந்திர மோடி, ஈராண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த நேர்காணலில், ஐமுகூ அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளில் செய்யாத அளவிற்கு சீர்திருத்தங்களை தன்னுடைய அரசாங்கம் கடந்த ஈராண்டுகளில் செய்திருக்கிறது என்று பீற்றிக் கொண்டார்.  அவர் கூறிடும் இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் என்னவென்று தெரிகிறதா? அவரே குறிப்பிட்டிருப்பதைப்போல, இன்சூரன்ஸ் மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறை போன்றவற்றை அந்நிய முதலீட்டுக்கு வெளிப்படையாகத் திறந்துவிட்டிருப்பதாகும். உலக அளவில் மிகவும் அதிகம் விற்பனையாகும் நிதி நாளேடு (financial daily) ஒன்றிற்கு மோடி அளித்துள்ள   ...

Read More »

மோடியின் ஈராண்டு: முதல் பலியானது ஜனநாயகம்

–ஷ்யாம் 2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவதற்காக ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மிஷ்ரா “டிராய்’’ எனப்படும்  டெலிகாம் ஒழுங்குமுறை குழுமத்தின் (TRAI-Telecom Regulatory Authority of India) தலைவராக இருந்தவர். டிராயின் தலைவர் மத்திய, மாநில அரசாங்கங்கள் எதிலும் நியமிக்கப்பட முடியாது என்று இந்திய சட்டங்கள் விதிமுறைகள் நிர்ணயித்திருக்கின்றன. மோடி தனக்கு வேண்டியவரை நியமிப்பதற்கு ...

Read More »

மோடியின் ஈராண்டுகள்: கண்களையும் காதுகளையும் திறக்கவும், மிஸ்டர் மோடி !

-சுபாஷிணி அலி உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்னுமிடத்தில் 2015 செப்டம்பர் 28 அன்று முகமது அக்லாக் என்பவர் இந்து மத வெறியர்களால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார், அவர்மகன் தானிஷ் என்பவர் பலத்த காயங்களுக்கு ஆளானார், அவரது வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அக்குடும்பத்தார் மாட்டுக் கறி வைத்திருந்தார்கள் என்று வதந்தி பரவிஇருந்ததே காரணமாகும். மனிதாபிமானம் உள்ள எவராலும் தாங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்கள் இந்து ராஷ்ட்ரம் நிகழ்ச்சிநிரலின் ஒருபயங்கரமான அடையாளமாக இத்தகைய வெறித்தனத்தை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் நிகழ்ச்சிநிரலை எப்படி எல்லாம் உந்தித்தள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்? நாட்டின் மிக உயர்ந்த கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களின் தலைவர்களாக, தகுதிகுறைந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பது என்பது வழக்கமாகவே மாறி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் வளையத்திற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் எவ்வளவுபெரிய வல்லுநர்களாக இருந்தாலும் அவர்களை வேண்டுமென்றே தரக்குறைவாகத் தாக்குவதை  நடைமுறையாகக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம், ரிசர்வ் வங்கிஆளுநரை பாஜக எம்பி சுப்பிரமணிய சாமி மிகவும் கண்டித்தக்கவிதத்தில் கோழைத்தனமாகத் தாக்கி இருப்பதாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வரலாறு மற்றும் இதரப் பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் செய்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில்இருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயர் மற்றும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு குறித்தும் இருந்த பகுதிகளை நீக்கியிருப்பதாகும்.  இதையேநீக்கியவர்கள், நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியைக் கொன்றதை பாடப் புத்தகத்தில் விட்டு வைப்பார்களா? அதையும் நீக்கி விட்டார்கள். அதிகரித்து வரும் மதவெறி வன்முறைகள் ஆர்எஸ்எஸ் தலைமையில் உள்ள சங் பரிவாரம் (பாஜக இதன் ஓர் அங்கம்தான்)  தங்கள் அரசியல் வெற்றிகளுக்கும், தங்களை நோக்கி இந்து மதத்தில் உள்ள பல்வேறு இனங்களையும்தங்களை நோக்கி இழுப்பதற்கும் மதவெறியை அதிகரிப்பதே ஒரே வழி என்று நம்பி அதன் படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங் பரிவாரம் உருவான காலத்திலிருந்தே, மதவெறிநடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கூர்மைப்படுத்தி அதன் மூலம் தாங்கள் வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. மாநில அரசுகளை அமைப்பதில்எங்கெல்லாம் அவர்கள் வெற்றி பெற்றார்களோ அங்கெல்லாம் இந்த வேலைகளை மிகவும் வேகமாகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில், ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சாரகரானமோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய அரசு, ஆர்எஸ்எஸ்-இன் வழிகாட்டுதலின்படி, பல்வேறு மாநிலங்களிலும் சங் பரிவாரம் தன் மதவெறியாட்டங்களை நடத்துவதற்கு ஒருகேடயமாக நின்று அதற்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. 2014ஆம் ஆண்டைக் காட்டிலும், 2015 ஆம்  ஆண்டில்   மதவெறி  வன்முறை  வெறியாட்டங்கள்  17  சதவீதம்  அதிகரித்திருக்கின்றன.  இந்தப்  புள்ளி  விவரங்கள் கூட உண்மையில் மதவெறியின் உண்மையான பரிமாணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்காது. ஏனெனில் பதிவு செய்யப்பட்ட மதக் கலவரங்களின்அடிப்படையில்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மக்கள் மத்தியில் மதவெறி உணர்வைக் கொண்டு சென்றிருப்பது என்பது இதைவிடப் பன்மடங்கு அதிகமாகும். மதமாற்றம் என்ற பெயரில்  முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் அல்லது வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் இப்புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின்கொள்கைகளை எதிர்ப்பவர்கள் எல்லாம் `பாகிஸ்தான் ஆதரவு தேச விரோதிகள்’ என்று உடனடியாக முத்திரை குத்தப்பட்டு, அவர்களது எதிர்ப்புக்கு மதவெறிச் சாயம் பூசப்பட்டுவிடுகிறது. 2014 மே இறுதியில்  பிரதமர் மோடி “அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி’’ (‘Sabka Vikas, Sabke Saath’,,) என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒருசில நாட்களிலேயே, இந்து வெறியர்களின் கும்பல் ஒன்று புனேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளையும், சொத்துக்களையும் அடித்து நொறுக்கின. சங் பரிவாரக் கும்பலிடமே  மிகவும் `நல்ல முஸ்லீம்’ என்று பெயர் வாங்கியிருந்த ஓர் இளம் ...

Read More »