Tag Archives: கருத்துரிமை

தமிழகத்தில் விரும்பிய உணவை சாப்பிட உரிமை இல்லையா?

திருவண்ணாமலை காவல்துறையின் அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! திருவண்ணாமலையில் 1.11.2015 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து ‘எனது உணவு; எனது உரிமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனொரு பகுதியாக, மாட்டுக்கறி உணவு பரிமாறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையிடம் ஏற்கெனவே அனுமதி பெறப்பட்டிருந்தது. கருத்தரங்கத்தை நடத்துவதற்கு இன்று (1.11.2015) மாலை பெரியார் சிலை அருகே தலைவர்களும், தொண்டர்களும் கூடி நின்ற போது, காவல்துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து ...

Read More »

திராவிட கழகத்தினர் மீது இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல்: சிபிஐ(எம்) கண்டனம்

Tahli

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி உணவு அருந்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறை விதித்திருந்த தடையை ரத்து செய்தும், நிகழ்ச்சிக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கேற்ப ஏப்ரல் 14 அன்று காலை தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. ஆனால் அன்று மாலையில் இந்துத்துவ சிவசேனா அமைப்பைச் சார்ந்தவர்கள் பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த திராவிடர் கழகத்தினரின் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ...

Read More »

புதிய தலைமுறை ஊழியர்கள் மீது தாக்குதல்:சிபிஐ(எம்) கண்டனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது வலதுசாரி இந்துத்துவா பிற்போக்குக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சர்வேதச மகளிர் தினத்தையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “தாலி“ குறித்து  விவாதம் ஒன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு முன்பே கலாச்சார காவலர்களாக தங்களை நினைத்துக் கொள்ளும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் வரை சென்று ஊழியர் ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கேமராவையும் பறித்து ...

Read More »