Tag Archives: காவல்நிலைய மரணம்

முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவரை, 1.08.2018 அன்று முதுகுளத்தூர் காவல் நிலையத்தைச் சார்ந்த கோதண்டபாணி, லிங்ககிருஷ்ணன் மற்றும் இரண்டு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 02.08.2018 அன்று மணிகண்டனை விசாரிக்கச் சென்ற அவருடைய தாயாரிடம் முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இந்த வழக்கிலிருந்து மணிகண்டனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ. 85,000/- லஞ்சம் கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மணிகண்டனின் தாயார் பணம் கொடுக்காததால் மணிகண்டனை காவல்நிலையத்திற்குள் வைத்து கடுமையாக அடித்து, உதைத்து, சித்தரவதை செய்ததன் ...

Read More »