Tag Archives: கியூபா

அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகத்தின் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள கியூபா தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள கியூபா தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. ஓர் அடையாளம் தெரியாத நபர், தூதரகத்தின்மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.   கியூபா தூதரகத்தில் கியூபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள்  இருந்ததன் காரணமாக,  இதில் தூதராலயத்தைச் சேர்ந்த எவருக்கும் காயம் இல்லை. தூதரகத்தில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு ...

Read More »

விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை – என்ற நம்பிக்கையோடு மேம்பட்ட பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அதிர வைக்கக்கூடிய பேரணிகளும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களுமாக மே தின விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அவரவர் இருந்த இடத்திலேயே, இப்போதிருக்கும் இடர்பாடு நீங்க உலகிற்கு மாற்றாக எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னுலகை உருவாக்குவதற்கான சூளுரையை ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் சுருண்டு கிடக்கிறது. ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை!

இந்தியாவின் “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மருந்து சரக்குகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய பின், தமிழகத்திற்கு வரவிருந்த சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழிமாற்றிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து இந்தியா “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் அது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டது என சப்பைக் கட்டு கட்டினார்கள். அனால் இன்று அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ள உக்கிரம், அப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நாம் திரும்பி எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரியப் போர் காலத்து அமெரிக்க சட்டமான “பாதுகாப்பு உற்பத்தி ...

Read More »

பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:

மாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம். தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது ...

Read More »