Tag Archives: கே. பாலகிருஷ்ணன்

சட்டமன்றம் – நாடாளுமன்றம் துவங்கும் நாள் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்!

செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)யின் மாநிலத்தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாநில செயலாளர் என்.கே.நடராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத் (மத்தியக்குழு உறுப்பினர்கள்)  க.கனகராஜ் (மாநில செயற்குழு உறுப்பினர்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் ...

Read More »

வட்டி கொடுமையால் இளைஞர் தீக்குளித்து மரணம் : கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல் !

வட்டி கொடுமையால் இளைஞர் தீக்குளித்து மரணம் : அனைத்து கடன் வசூலையும் ஒத்தி வைப்பதுடன், கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல் ! தஞ்சாவூர் அருகே, வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு ஆனந்த் என்ற இளைஞர் நேற்று (29.8.2020)  தீக்குளித்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. வெல்டரான ஆனந்த் வீடு கட்ட தனியார் வங்கியிடம் கடன் பெற்று அசலை விட அதிகமான தொகையை வங்கியில் திருப்பிச் ...

Read More »

மாநில அரசுகளை திவாலாக்கும் மத்திய அரசின் முயற்சி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சரக்கு மற்றும் சேவை வரிகள் (GST) மன்றத்தின் கூட்டம் புதுடில்லியில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட நிதிபற்றாக்குறையை மாநிலங்கள் ஈடுசெய்வது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மாநில அரசுகளை திவால் நிலைக்கு தள்ளும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் 2017ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்கள் தங்கள் சொந்த தேவைக்கு சுயேச்சையாக வரிவிதிப்பு செய்யும் அதிகாரம் முழுவதும் பறிக்கப்பட்டு விட்டது. பேரிடர் நிவாரணத்திற்காக ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தே. இலட்சுமணன் மறைவு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தே. இலட்சுமணன் (வயது 84) கோவிட் – 19 பாதிப்பு காரணமாக நேற்று (24.08.2020) இரவு உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த தோழர் தே. இலட்சுமணன் கால்நடைத்துறையில் சேர்ந்து அரசுப் பணியாற்றினார். கால்நடைத்துறை ஊழியர்களை அணிதிரட்டி படிப்படியாக தோழர் எம்.ஆர். அப்பனுடன் இணைந்து அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். ...

Read More »

பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திட 10,000 மையங்களில் சிபிஐ(எம்) நடத்தும் மாபெரும் மக்கள் இயக்கம் !

கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திட ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் தமிழகத்தில் 10,000 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மாபெரும் மக்கள் இயக்கம் அனைத்து குடும்பத்தினருக்கும் (வருமான வரி செலுத்தாத) அடுத்த ஆறுமாத காலத்திற்கு மாதம்தோறும் மத்திய அரசு ரூ. 7,500/-, மாநில அரசு ரூ. 5,000/- என ரூ. 12,500/- ரொக்கமாக வழங்கிட வேண்டும். தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுத்திட சோதனைகளை அதிகப்படுத்திட வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் சேர்த்து முறையான சிகிச்சை வழங்கிட வேண்டும்; ...

Read More »

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள் : அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுவது தொடர்பாக… அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை இம்மனுவின் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் ...

Read More »

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் !

சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே,பாலகிருஷ்ணன் கடிதம்! பொருள் : பெண் பத்திரிகையாளர்கள் மீது ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் சமூக ஊடக பதிவுகள் தொடர்வது – நடவடிக்கையின்மை – உரிய நடவடிக்கைகள் கோருவது சம்பந்தமாக சில பெண் ஊடகவியலாளர்கள் மீது அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் இழிவு செய்து தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் சில நபர்கள் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தனிப்பட்ட முறையில் புகார் அளித்துள்ளனர். கூட்டாகவும் காவல்துறை ஆணையரிடம் முறையீடு செய்துள்ளனர். ஆயினும், இத்தகைய பதிவுகள் நின்றபாடில்லை. ...

Read More »

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அறிவித்தது. இதனை எதிர்த்து, இந்திரா சஹானி என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்படோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டுமென தீர்ப்பளித்தது. அதே சமயம் இந்த சலுகையினை பெறுவதற்கு வருமான வரம்பினை (கிரிமிலேயர்) தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதன்படி வருமான வரம்பினை தீர்மானிப்பதற்கு நீதிபதி ராம் நந்தன் பிரசாத் அவர்கள் ...

Read More »

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்!

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா காலத்திற்கு மின் கட்டணம் குறைப்பு கோருவது தொடர்பாக:- * கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் ...

Read More »

அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. எனினும், அந்த நடவடிக்கைகள் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் பின்னணியில் ஒரு நாளைக்கு 2000 என்ற ...

Read More »