Tag Archives: கொரானா வைரஸ்

கொரானா வைரஸ் தொற்றைக் காரணம் கூறி வசூலித்துள்ள பணத்தை இப்போதாவது செலவு செய்திட பிரதமர் மோடி முன்வர வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்!

கொரானா வைரஸ் தொற்றைக் காரணம் கூறி, தன் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் வசூல் செய்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை, இப்போதாவது பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு செலவு செய்திட பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் இந்தியா, பிரேசிலைப் பின்தள்ளி, முதலிடத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது ...

Read More »

பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் பொது சுகாதார அமைப்புமுறை போதுமான அளவிற்கு இல்லாதிருப்பதையும், அதனை ஆட்சியாளர்கள் அசிங்கமான முறையில் புறக்கணித்து வருவதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சமூக முடக்கம் பிறப்பித்து 50 நாட்கள் கழிந்தபின்னரும், மோடி அரசாங்கம் இந்த மிக நாசகர வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அனுபவத்திலிருந்து எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாததாலும் திணறிக்கொண்டிருக்கின்றன. ...

Read More »

எதேச்சதிகாரம் வலுவாகி இருக்கிறது

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் கோவிட்-19 தொற்று, மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளை மேலும் தீவிரமான முறையில் வலுப்படுத்தி இருக்கிறது. 2014 மே மாதத்தில் மோடி அரசாங்கம் அமைக்கப்பட்டதுமே எதேச்சாதிகாரப் போக்கு துவங்கிவிட்டது. அதன்பின்னர் 2019 மே மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்பு, அது கெட்டிப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் இந்த ஓராண்டு காலத்தில், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று உருவாக்கி இருக்கக்கூடிய அதீதமான சூழ்நிலையை அவர்கள் தங்கள் எதேச்சாதிகார ஆட்சியை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரானா வைரஸ் தொற்று இந்தியாவை முழு வீர்யத்துடன் ...

Read More »

மத்திய அரசின் இரண்டாவதுநிதித்தொகுப்புமிகவும் குரூரமான ஏமாற்றுவேலைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை

மத்திய அரசின் இரண்டாவது நிதித் தொகுப்பு, மிகவும் குரூரமான ஏமாற்றுவேலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கான 20 லட்சம்  கோடி ரூபாய் இரண்டாவது நிதித்தொகுப்பு, ஒரு குரூரமான ஏமாற்றுவேலையாகும். மக்களுக்கு உதவிட மத்திய அரசாங்கம் செய்ததாக, நிதியமைச்சர் தன் உரையில்  கூறியிருப்பதெல்லாம் பொய்யானவைகளாகும். மிகவும் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு, அதிலும் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், வீதிகளில் வியாபாரம் செய்பவர்கள், வீட்டுவேலை ...

Read More »

புலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.

சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல் புலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், வருமானவரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும், ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாகச் செய்திட வேண்டும். இம்மூன்று கோரிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முகநூல் காணொளிக்காட்சிமூலம் ...

Read More »

கொரானா வைரஸ் தொற்று குறித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம்

கொரானா வைரஸ் தொற்று குறித்து உரியநடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அவர் குடியரசுத் தலைவருக்கு திங்கள் அன்று, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையிலும், உங்களுடைய அனுமதி மற்றும் அதிகாரத்தின் கீழ்தான் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது என்பதாலும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதி இருக்கிறேன். நாடும், நாட்டு மக்களும் இதுவரையில்வ இரு அடையாளபூர்வமான நிகழ்வுகளின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, நாடு, குரோனா ...

Read More »

நாடுமுழுதும் உள்ள ஏழைகளைக் காப்பாற்றிட இருப்பிலுள்ள தானியங்களை விநியோகித்திட மத்திய அரசு முன்வர வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நாடு, மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைத் தடுத்துநிறுத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாலும், அதன் பொருளாதாரப் பாதிப்புகளும் ஏற்கனவே நாட்டின் பெரும்பான்மையான ஏழை மற்றும் விளிம்புநிலைமக்களைக் கடுமையாக பாதித்திருப்பதாலும், மத்திய அரசாங்கம் இருப்பிலுள்ள தானியங்களை பொது விநியோக முறையில் ஏழைகளுக்கு விநியோகம் செய்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டில், சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற பல துறைகளிலும் வேலைகள் ஸ்தம்பித்திருப்பதால், அவற்றில் ...

Read More »