Tag Archives: கொரோனா வைரஸ்

பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திட 10,000 மையங்களில் சிபிஐ(எம்) நடத்தும் மாபெரும் மக்கள் இயக்கம் !

கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திட ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் தமிழகத்தில் 10,000 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மாபெரும் மக்கள் இயக்கம் அனைத்து குடும்பத்தினருக்கும் (வருமான வரி செலுத்தாத) அடுத்த ஆறுமாத காலத்திற்கு மாதம்தோறும் மத்திய அரசு ரூ. 7,500/-, மாநில அரசு ரூ. 5,000/- என ரூ. 12,500/- ரொக்கமாக வழங்கிட வேண்டும். தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுத்திட சோதனைகளை அதிகப்படுத்திட வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் சேர்த்து முறையான சிகிச்சை வழங்கிட வேண்டும்; ...

Read More »

ரெம்டேசிவிர்: கண்டுபிடிப்புஏகபோகத்தை உடைத்திடு!கட்டாய உரிமம் வழங்கிடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை முறியடிப்பதற்காக வெளிவந்துள்ள ராம்டேசிவிர் என்னும் மருந்தினை பொது மருந்தாக (generic medicine) உற்பத்தி செய்திட வேண்டும் என்று அதன் உற்பத்தி நிறுவனத்திற்கு கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92ஆவது பிரிவின் கீழ் கட்டளை பிறப்பிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.   இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரெம்டேசிவிர் (Remdesivir) என்னும் கிலீட் சயின்சஸ் (Gilead Sciences) நிறுவனத்தின் வைரஸ் ...

Read More »

அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. எனினும், அந்த நடவடிக்கைகள் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் பின்னணியில் ஒரு நாளைக்கு 2000 என்ற ...

Read More »

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி தெரியாத மோடி அரசு மக்கள் மீது முரட்டுத் தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதனன்று இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: 2020 ஜூன் 1 அன்று, மத்திய அரசாங்கம், முன்பு அறிவித்த நிதித்தொகுப்புகளுடன், மேலும்20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதித் தொகுப்புகளை ...

Read More »

எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட்டம் இன்று நடைபெறுகிறது

புதுதில்லி, மே 21 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் வெள்ளிக் கிழமை அன்று மாலை 3 மணியளவில் தலைநகர் புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கானொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இதில் பங்கேற்கிறார். அப்போது அவர் கீழ்க்கண்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளுக்காக முன்வைக்கிறார். அதன்பின்னர் மத்திய அரசாங்கத்தின் உடனடி அமலாக்கத்திற்காக அவை கூட்டாக எழுப்பப்படும். கோரிக்கைகள்: 1.         வருமான வரி செலுத்தும் நிலையில் இல்லாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் கொரானா வைரஸ் தொற்றுக் ...

Read More »

அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக தொழிலாளர்நலச் சட்டங்கள் திருத்தம் குடியரசுத் தலைவர் தலையிட்டு தடுத்த நிறுத்த வேண்டும்!!

இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கடிதம் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக, தொழிலாளர்நலச் சட்டங்கள் திருத்தப்பட்டிருப்பதனை, குடியரசுத் தலைவர் தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் ...

Read More »

விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை – என்ற நம்பிக்கையோடு மேம்பட்ட பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அதிர வைக்கக்கூடிய பேரணிகளும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களுமாக மே தின விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அவரவர் இருந்த இடத்திலேயே, இப்போதிருக்கும் இடர்பாடு நீங்க உலகிற்கு மாற்றாக எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னுலகை உருவாக்குவதற்கான சூளுரையை ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் சுருண்டு கிடக்கிறது. ...

Read More »

உங்கள் அரசு வேலை செய்கிறதா பிரதமரே!

சீத்தாராம் யெச்சூரி கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றை முறியடித்திட தற்போதைய சூழலில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள கடிதம். துரதிர்ஷ்டவசமாக, சமூக முடக்கக் காலத்தில் மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. என்னுடைய முந்தைய கடிதங்களுக்கும் தங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. உண்மையில், அவை வரப்பெற்றதற்கான ஏற்பளிப்புகூட இல்லை. இது வழக்கமற்ற ஒன்று. நாடும், நாட்டின் பெரும்பாலான மக்களும் ...

Read More »

கொரோனாவை விட கொடியது மத்திய அரசின் மனப்பான்மை…

தொழில் மந்தநிலை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ள மாநில அரசுகளே நேரடியாக செலவழிக்க வேண்டிய நிலையுள்ளது. இத்தகைய நிலையில் கூட மத்திய அரசு கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு போதுமான உதவிகள் செய்ய முன்வரவில்லை. இதுவரையிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எந்த வகையிலும் தற்போதைய இடர்பாடுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் அமையவில்லை. இது ஒருபுறமிருக்க, மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களின் உரிமைகளின் மீதும், நிதி ஆதாரங்களின் மீதும் மிகக் கடுமையான ஆக்கிரமிப்பை செய்து வந்திருக்கிறது. ஜிஎஸ்டி ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை!

இந்தியாவின் “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மருந்து சரக்குகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய பின், தமிழகத்திற்கு வரவிருந்த சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழிமாற்றிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து இந்தியா “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் அது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டது என சப்பைக் கட்டு கட்டினார்கள். அனால் இன்று அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ள உக்கிரம், அப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நாம் திரும்பி எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரியப் போர் காலத்து அமெரிக்க சட்டமான “பாதுகாப்பு உற்பத்தி ...

Read More »