Tag Archives: கொரோனா

ஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்!

தமிழகத்தில் 5 மாதத்திற்கு மேலாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பொது முடக்கம் மூலமாக மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று மத்திய அரசும், அதை அப்படியே பின்பற்றிய மாநில அரசும் நோய்த்தொற்று அதிகமாகிக் கொண்டிருப்பதை கையறு நிலையில் வேடிக்கை பார்ப்பதாகவே தெரிகிறது. பரிசோதனை எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 6000க்குள்ளாகவே இருப்பதும், மரணங்களின் எண்ணிக்கை 115 என்ற அளவில் இருப்பது பல விதமான கேள்விகளை எழுப்புகிறது. மேலும், ...

Read More »

அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. எனினும், அந்த நடவடிக்கைகள் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் பின்னணியில் ஒரு நாளைக்கு 2000 என்ற ...

Read More »

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி தெரியாத மோடி அரசு மக்கள் மீது முரட்டுத் தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதனன்று இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: 2020 ஜூன் 1 அன்று, மத்திய அரசாங்கம், முன்பு அறிவித்த நிதித்தொகுப்புகளுடன், மேலும்20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதித் தொகுப்புகளை ...

Read More »

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசே கைவிடு…

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே! மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசு கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்! மத்திய அரசு மின்சாரத் துறையில் தனியார்மயமாக்கலை எவ்வளவு விரைவாக செயல்படுத்திட முடியுமோ அவ்வளவு விரைவாக செய்திட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு நாடே பரிதவித்து கொண்டிருக்கிற இந்த அசாதாரணச் சூழலில் மின்சார வாரிய ஊழியர்கள் வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் இரண்டாம் கட்ட வீரர்களாக பணியாற்றி வரும் சூழலில்,  தனியார் ...

Read More »

பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோரி தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்…

பெறுநர்             பொது மேலாளர் அவர்கள்,             தென்னக ரயில்வே,             சென்னை – 600 003. அன்புடையீர், வணக்கம். பொருள்:-     பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோருவது தொடர்பாக… கொரோனா நோய்த் தடுப்பையொட்டி மார்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முதலாவது ஊரடங்கு காலம் முதல் இன்று வரை அனைத்து புறநகர் இரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் புறநகர் இரயில் சேவைகள் துவங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிற மக்கள் பல்வேறு இரயில் ...

Read More »

தொழிலாளர் வேலைநீக்கம், சம்பள வெட்டு உள்ளிட்ட அநீதிகளை கைவிடுக! சிபிஎம் வலியுறுத்தல் !!

கொரோனா தொற்று பாதிப்பால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சமூகத்தின் அனைத்து பகுதியினரும் அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தொழில் நிறுவனங்கள், தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை முன்னிறுத்தி பல்வேறு சலுகைகளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். இந்த கோரிக்கையில் நியாயமிருக்கிறது. அதைப்போன்று, ஒவ்வொரு தொழிலிலும் அங்கமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களும் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசு அறிவிக்கும் சலுகைகள் எதுவும் இந்த தொழிலாளர்களை சென்று சேரவில்லை. இந்நிலையில், பல நிறுவனங்கள் கொரோனா ...

Read More »

டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த உத்தரவுக்கு இன்று உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. மேலும், தமிழகத்தின் சமூக நிலைமையையும், பெண்களின் உணர்வையும் கணக்கில் எடுத்து வழங்கப்பட்டதாக இத்தீர்ப்பு அமையவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மதுபானக் கடைகள் திறப்பும்,  வியாபாரமும் நோய்த்தொற்றை நிச்சயமாக அதிகப்படுத்தும். தனிமனித விலகல் ...

Read More »

நிதி வழங்காத மத்திய அரசையும் டாஸ்மாக்கைத் திறக்கும் மாநில அரசையும் கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில்

கருப்பு அட்டையுடன் ஆர்ப்பாட்டம்! அனைவரும் பங்கேற்க சிபிஐ(எம்) வேண்டுகோள்! கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது ஊரங்கால் ஏழை – எளிய மக்கள், அன்றாடக் கூலி உழைப்பாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மீனவர்கள், நெசவாளர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டுமென தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் வற்புறுத்தப்பட்டு வரும் கோரிக்கைகளை மாநில அதிமுக அரசு நிராகரித்து வருகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் நாளை மதுக்கடைகள் திறந்திட உள்ளது. ...

Read More »

ஊரடங்கு நீட்டிப்பு மட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்தாது! நிவாரணங்களை அறிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு மீண்டும் ஊரடங்கினை மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்த 5 வாரங்களாக வேலையும் வருமானமும் இன்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் எளிய உழைப்பாளி மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்திற்கான எந்த நிவாரண உதவிகளையும் அறிவிக்காமல் விட்டது மத்திய அரசின் பொறுப்பற்ற செயலாகும். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூடி, மே 17 வரை ஊரடங்கை நீட்டிப்பது என்றும், சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது எனவும் முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலும் சாதாரண உழைப்பாளி, விவசாயிகள், ...

Read More »

தமிழக அரசே, ஒப்பந்த பணிகளுக்கு அவசரமாக டெண்டர் விடும் ஏற்பாட்டை ரத்து செய்!

இருக்கும் நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்து – ஆசிரியர் அரசு ஊழியர் உரிமைகள் மீது கை வைக்காதே! உலகமே கொரோனா தாக்கத்தால் ஸ்தம்பித்து நிற்கும்போது, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கு டெண்டர் விடும் ஏற்பாட்டை தமிழக அரசு மே மாதம் செய்ய உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.5000 கோடிக்கு மேல், பொதுப்பணித்துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் பெறுமானமுள்ள பணிகள் இதில் உள்ளடங்கும். இந்தப் பணிகள் அனைத்தும் கொரோனா தாக்கத்திற்கு ...

Read More »