Tag Archives: கோவிட் 19

தேர்தல் நடைமுறையில் ஒருதலைப்பட்சமாக மாற்றங்கள்

சீத்தாராம் யெச்சூரி கடும் எதிர்ப்பு நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடத்துவதில், தேர்தல் நடைமுறைகளை மாற்றி, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபணை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின், தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோராவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி நாட்டில் இதுவரை நிறுவப்பட்டிருந்த நடைமுறையான, அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசித்தே, தேர்தல் நடைமுறைகளில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர வேண்டும் என்கிற ...

Read More »

எதேச்சதிகாரம் வலுவாகி இருக்கிறது

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் கோவிட்-19 தொற்று, மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளை மேலும் தீவிரமான முறையில் வலுப்படுத்தி இருக்கிறது. 2014 மே மாதத்தில் மோடி அரசாங்கம் அமைக்கப்பட்டதுமே எதேச்சாதிகாரப் போக்கு துவங்கிவிட்டது. அதன்பின்னர் 2019 மே மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்பு, அது கெட்டிப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் இந்த ஓராண்டு காலத்தில், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று உருவாக்கி இருக்கக்கூடிய அதீதமான சூழ்நிலையை அவர்கள் தங்கள் எதேச்சாதிகார ஆட்சியை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரானா வைரஸ் தொற்று இந்தியாவை முழு வீர்யத்துடன் ...

Read More »

இணையவழிக் கல்வி முறையும் சவால்களும்!

கோவிட் 19 எனப்படும் கொரோனா நுண்மியின் பாதிப்பை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்ந்து கொண்டுள்ளனர். மிகவும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருப்பது விவசாயமா, சிறு, குறு தொழில் நிறுவனங்களா என்பதை விவாதித்துக் கொண்டிருக்கிறோம். கோவிட் 19 உருவாக்கியுள்ள சமூக இடைவெளியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கல்வித்துறை என்பதைப் பலரும் உணருவதில்லை. ஊரங்கால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நமது தேசத்தின் எதிர்காலமான கல்வியே… கடந்த பல வாரங்களாக பள்ளிகள் செயல்படவில்லை. மே 17க்குப் பிறகு என்ன நடக்கும் என்றும் முழுமையாகத் தெரியாது. மாணவர்கள், கல்வி நிலையங்கள், ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் ...

Read More »

புலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.

சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல் புலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், வருமானவரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும், ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாகச் செய்திட வேண்டும். இம்மூன்று கோரிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முகநூல் காணொளிக்காட்சிமூலம் ...

Read More »

ஊரடங்கின் துயரம் தீர்க்க ஒரு பொருளாதார செயல்திட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம்

நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு துவங்கியது முதல் உருவான பிரச்சனைகளும், துயரங்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. கோடானுகோடி இந்திய மக்கள், குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், தினக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு கூட முடியாத அளவிற்கு அவர்களது இருப்பையே இந்த ஊரடங்கு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தப் பின்னணியில், மத்திய அரசு உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார திட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசின் முன்பும், நாட்டு மக்களின் ...

Read More »

பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:

மாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம். தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது ...

Read More »