Tag Archives: சிபிஐ(எம்)

கரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்!

சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டனம்… கரூர் மாவட்டம் சின்னமலைபட்டியில் இந்திரா நகர் காலனியில் 30க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே ஊரில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர் சேர்ந்த குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் பொது குடிநீர் பைப்பில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது அங்கு குளித்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியை சேர்ந்தவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுவர்களைப் பார்த்து சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், கடுமையாக பேசியும் ...

Read More »

எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தக் கூடாது! – கே. பாலகிருஷ்ணன்

எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கோடு இச்சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்வது, சிறையிலடைப்பது இச்சட்டத்தின் நோக்கத்திற்கே விரோதமானதாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வழக்கறிஞர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சாதிய ரீதியாக யாரையும் இழிவுபடுத்துகிற நிகழ்வுகளையும், கருத்துக்களையும் உறுதியாக எதிர்த்து குரல் கொடுத்து ...

Read More »

கரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். நேற்று (18/5/20) இரவு நியூஸ் 7 தொலைக்காட்சியில்  நடைபெற்ற ஒரு விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை பாஜகவின் சார்பில் விவாதத்தில் கலந்து கொண்ட கரு.நாகராஜன் தரம் தாழ்ந்தும். அநாகரிகமாகவும் விமர்சித்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இதை வன்மையாக கண்டிக்கிறது. நியாயப்படுத்த முடியாத தங்கள் கட்சி மற்றும் ஆட்சியின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த முனையும் பாஜக மற்றும் சங்பரிவார் ஆதரவாளர்கள் அதில் தோற்றுப் போகும்போது  தனிநபர் தாக்குதலில் ...

Read More »

பள்ளி மாணவி உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்! விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். கடந்த 10 ந்தேதி அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் ...

Read More »

தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…

சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (11.02.2020) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்… மாநிலங்களில் வருவாய்க்கான வாய்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு கொஞ்சம், கொஞ்சமாக கபளீகரம் செய்துள்ள நிலையில் பல மாநிலங்கள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. தமிழக அரசும் ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய பல்வேறு ...

Read More »

திருவள்ளுவரை இழிவுபடுத்தும் பாஜகவினருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!

திருவள்ளுவரை இவ்வாறு இழிவுபடுத்துவதை தமிழ் மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், திருவள்ளுவரை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read More »

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிடுக! தமிழக முதல்வருக்கு – சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிடுக!

Read More »

மக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை

மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை எதிர்ப்போம் இந்திய நாட்டில் கால்நூற்றாண்டுக்கு மேலாக மத்திய அரசு கடைபிடித்து வரும் உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் தமிழ்நாட்டிலும் மக்கள் வாழ்விலும், மாநில நலனிலும் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட இக்கொள்கைகளை நரேந்திர மோடி அரசும் தீவிரமாக அமலாக்கி வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், மக்கள் நலனுக்கும் விரோதமாக பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இக் கொள்கைகளை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை மக்கள் நலக் கூட்டியக்கம் முன்னெடுத்துச் செல்லும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை ...

Read More »

மக்கள் நலன் காக்கும்! கூட்டு இயக்கம்! சிபிஐ(எம்), சிபிஐ, மதிமுக, விசிக, மமக, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் அறைகூவல்!

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் 27.07.2015 மாலை சென்னையில் நடைபெற்றது: கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஉறிருல்லா எம்.எல்.ஏ, காந்திய மக்கள் இயக்கத்தின் பொருளாளர் பா.குமரய்யா, சிபிஐ(எம்) மத்தியக்குழு ...

Read More »

மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தையும், சட்ட ரீதியான உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திடுக!

மத்திய மாற்றுத்திறனாளி ஆணையர் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளி உரிமைகளில் ஆர்வம் உள்ள ஆணையமாக செல்பட உரிய நவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

Read More »