Tag Archives: செவிலியர்கள்

கொரோனா நோய்த்தொற்று -ஊரடங்கு – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்தி சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா நோய்த்தொற்று – ஊரடங்கு – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக… கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருவதுடன் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கும், ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களது கோரிக்கைகளையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருவதுடன் அவற்றை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். நோய்தொற்று நாளுக்கு ...

Read More »

தொகுதி மேம்பாட்டு நிதி: நாங்கள் கொண்டு வந்ததும் அவர்கள் கொண்டு போவதும்!

கடந்த மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான துணைக் கருவிகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்தேன். மொத்தமாக நிதியை ஒதுக்கி, “தேவையான துணைக்கருவிகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லாமல், கொரோனா வார்டுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மருத்துவமனை முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் கருத்துக்கேட்டு, அதன் அடிப்படையில் என்னென்ன துணைக்கருவிகள் வாங்க வேண்டும் என்ற பட்டியலோடு நிதி ஒதுக்கீடு செய்தேன். அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் நிர்வாக உத்தரவினை வழங்கினார். அன்றிலிருந்து வேலை தொடங்கியது.நாடெங்கும் மருத்துவக்கருவிகளை ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,  தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம் பொருள்:- கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவது தொடர்பாக… கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது என்பதைத் தவிர வேறு மாற்று வழியே இல்லை என்பதை பொது ...

Read More »

கொரோனா தடுப்பு நடிவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்! கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நடமாட்டத்திற்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம். நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது மட்டும்தான் இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்து நம்மையும் மற்றவர்களையும் பேராபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே, நம்மை இந்த வைரஸ் தாக்காது, நமக்கு எந்த நோயும் வராது என்ற நம்பிக்கையில் ...

Read More »

குழந்தைகள் மரணம் – உண்மைக் காரணங்களை மறைக்கக்கூடாது: சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர் அளித்துள்ள பேட்டியில் நடைபெற்ற மரணங்கள் அனைத்தும் இயற்கையானது என்றும் ஆண்டுதோறும் 20 ஆயிரம் குழந்தைகள் இப்படி இறப்பதாகவும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கூட ஒரே நாளில் 6 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் குழந்தை இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவும் எனவே அனைத்தும் சரியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மரணம் குறித்து மேற்கண்ட டாக்டர்கள் தெரிவித்துள்ள கருத்து மிகவும் நியாயமற்றது. மரணம் இயற்கையா? ...

Read More »