Tag Archives: தமிழகம்

டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த உத்தரவுக்கு இன்று உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. மேலும், தமிழகத்தின் சமூக நிலைமையையும், பெண்களின் உணர்வையும் கணக்கில் எடுத்து வழங்கப்பட்டதாக இத்தீர்ப்பு அமையவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மதுபானக் கடைகள் திறப்பும்,  வியாபாரமும் நோய்த்தொற்றை நிச்சயமாக அதிகப்படுத்தும். தனிமனித விலகல் ...

Read More »

நிதி வழங்காத மத்திய அரசையும் டாஸ்மாக்கைத் திறக்கும் மாநில அரசையும் கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில்

கருப்பு அட்டையுடன் ஆர்ப்பாட்டம்! அனைவரும் பங்கேற்க சிபிஐ(எம்) வேண்டுகோள்! கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது ஊரங்கால் ஏழை – எளிய மக்கள், அன்றாடக் கூலி உழைப்பாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மீனவர்கள், நெசவாளர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டுமென தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் வற்புறுத்தப்பட்டு வரும் கோரிக்கைகளை மாநில அதிமுக அரசு நிராகரித்து வருகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் நாளை மதுக்கடைகள் திறந்திட உள்ளது. ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை வழக்கம் போல கொண்டாட முடியாத விதத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் ஊரடங்கில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தன்னலம் பாராமல் இரவு பகலாக மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்து பார்க்கிறோம். ஒரு உலகளாவிய நோய் தொற்றை எதிர்கொள்ள முடியாமல் முதலாளித்துவ அமைப்பு ...

Read More »

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக…

CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக… தமிழகத்தில் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பேர் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்திற்கு போவதற்கான ...

Read More »

கொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுங்கள்” : முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,   சென்னை – 600 009 வணக்கம். பொருள்:-    கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – தமிழகம் முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பலவிதமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்வது – அவசரமாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக… 1. தற்போது நாம் அசாதாரணமான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகளுக்கு கட்சி ...

Read More »

தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…

சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (11.02.2020) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்… மாநிலங்களில் வருவாய்க்கான வாய்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு கொஞ்சம், கொஞ்சமாக கபளீகரம் செய்துள்ள நிலையில் பல மாநிலங்கள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. தமிழக அரசும் ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய பல்வேறு ...

Read More »

கமலஹாசனை மிரட்டும் அமைச்சர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திரு.கமலஹாசன் அவர்களை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள் மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் திரு.கமலஹாசன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

Read More »

கிரானைட் குவாரி முறைகேடுகளை விசாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்குக!

தமிழகத்தில் கிரானைட் உட்பட கனிம குவாரிகளில் நடைபெற்றுவரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சனையில் சி.பி.ஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்து தொடர்ந்து போராடியும் வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியராக உ.சகாயம் ஐ.ஏ.எஸ் செயல்பட்டபோது கிரானைட் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளையால் அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது பற்றி விசாரணை அறிக்கை அனுப்பியிருந்தார். இப்பின்னணியில் மேற்கண்ட இயற்கை வளங்கள் கொள்ளை போவது குறித்து ஆய்வு ...

Read More »