Tag Archives: தமிழக அரசு

சிறு. குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கே,பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர்                 மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,                 தமிழ்நாடு அரசு,                 தலைமைச் செயலகம்,                 சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-       சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க  தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்துவது தொடர்பாக… தமிழகத்தில் 22.21 இலட்சம்  பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களும், 119 தொழிற்பேட்டைகளும், 5 மகளிர் தொழில்பூங்காக்களும் உள்ளன. சுமார் 1.4 கோடிபேர் இதன் மூலம்  வேலைவாய்ப்பு பெறுகின்றனர், தமிழக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில்  சுமார் 40 ...

Read More »

10ம் வகுப்பு பொதுத் தேர்வு – பள்ளிகளைத் திறந்து இரு வாரங்கள் கழித்து நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழக அரசு ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்தக் காலம் முழுவதும் தொடர்ந்து முற்றிலும் வேறான உளவியல் மற்றும் குடும்பச் சூழலில் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய சூழல் வெவ்வேறு விதமான மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்கு தேர்வு எழுதும் மனநிலையை உருவாக்கிட வேண்டும். இம்மாத இறுதியிலும், ஜூன் மாதம் துவக்கத்திலும் கொரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் என பரவலான கருத்து நிலவுகிறது. இச்சூழ்நிலையில் மாணவர்களை தனிமனித இடைவெளியுடன் தேர்வு எழுத ...

Read More »

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வரம்பு அதிகரிப்பு அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 58 லிருந்து 59 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது எவ்விதத்திலும் பொருத்தமானது அல்ல. இந்த நடவடிக்கையின் மூலமும், ஏற்கனவே அவர்களுடைய அகவிலைப்படி முடக்கம் உள்ளிட்ட ஏற்பாடுகளின் மூலமும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு மிச்சப்படுத்துகிறது. மத்திய அரசிடம் பல்வேறு வகையினங்களில் மாநிலத்துக்கு வர வேண்டிய  தொகையையும், நிவாரண நிதியையும் போராடி பெறுகிற துணிச்சல் அற்ற அரசாக, மாநில உரிமைகளை காவு கொடுக்கும் அரசாக, ஊழியர்கள் ...

Read More »

தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்! கொரோனா தொற்று உழைப்பாளிகள் மற்றும் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வை சிதைத்துள்ள நிலையில் இதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் சில முதலாளி சங்கங்கள் தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை, தேசத்தின் நலன் என்ற முகமூடியோடு பறித்திட முனைந்துள்ளன. மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கிற பாஜக அரசு ஏற்கெனவே, தொழிலாளர்கள் போராடி பெற்ற பல உரிமைகளை சட்டத் திருத்தத்தின் மூலம் பறித்துக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசாங்கம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்ற ...

Read More »

ஊரடங்கு நீட்டிப்பு மட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்தாது! நிவாரணங்களை அறிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு மீண்டும் ஊரடங்கினை மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்த 5 வாரங்களாக வேலையும் வருமானமும் இன்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் எளிய உழைப்பாளி மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்திற்கான எந்த நிவாரண உதவிகளையும் அறிவிக்காமல் விட்டது மத்திய அரசின் பொறுப்பற்ற செயலாகும். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூடி, மே 17 வரை ஊரடங்கை நீட்டிப்பது என்றும், சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது எனவும் முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலும் சாதாரண உழைப்பாளி, விவசாயிகள், ...

Read More »

கொரோனா பரிசோதனைக் கருவிகள் அதிக விலைக்கு வாங்கியதிலுள்ள மர்மத்தினை மத்திய, மாநில அரசுகள் விளக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கொரோனா தொற்றை பரிசோரிப்பதற்காக சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் (Rappid Test Kid) வாங்கியதில் பல கோடி ரூபாய் சில இடைத்தரகர் கம்பெனிகள் லாபம் ஈட்டியுள்ள விபரத்தினை தில்லி உயர்நீதிமன்றம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த அளவிற்கு இடைத்தரகர் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை போயிருப்பது ஏன் என்ற கேள்வி எழுவதோடு, அந்தக் கொள்ளையில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு உள்ளதா என்ற பொது மக்களின் சந்தேகங்களுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் விளக்கிட வேண்டும். உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள ...

Read More »

உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்! இன்று (25-4-2020) காலை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,  இராமபட்டணத்தில் ராமசாமி (வயது 75) என்கிற விவசாயி அவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது நிலத்தில் தமிழக மின் தொடரமைப்பு கழகம் 400 கே.வி. உயர்மின் அழுத்த மின்கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்காக விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்தார். அவர் கேட்ட இழப்பீட்டை வழங்குவதாகக் ...

Read More »

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்க வேண்டும்..!

தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-    குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்கி முடிப்பது தொடர்பாக… கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் ஆயிரமும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்குவது என அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 2ம் தேதி ...

Read More »

உப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ! – கே.பாலகிருஷ்ணன்.

2020-21 நிதிநிலை அறிக்கை தமிழக அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். இது மாதிரியான வாய்ப்பினை மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்கு தமிழக மக்கள் வழங்கமாட்டார்கள் என்பதை இந்த பட்ஜெட் உரை தெளிவாக்குகிறது. மக்களுக்கான நலத் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வேலையின்மை அகில இந்திய சராசரியை விட அதிகமாக இருக்கும் போது அதுகுறித்து பாராமுகமான பட்ஜெட்டாகவே இது உள்ளது. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கில் சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து ...

Read More »

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்

பொறியியல் படிப்பில் பகவத்கீதை பாடம் என்பது வன்மையாக கண்டிக்கக்கது. மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது. அனைத்து மத மாணவர்களும் படிக்கும் ஒரு படிப்பில் குறிப்பிட்ட மத போதனையை புகுத்துவதும், இதற்கு தமிழக அதிமுக அரசு துணைபோவதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பபெற வேண்டும்.

Read More »