Tag Archives: தமிழ்நாடு

மூத்த பத்திரிகையாளர் ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் ‘தி இந்து’ நாளேட்டின்’வாசக ஆசிரியராக’ இருந்தவருமான ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Read More »

தாய்மொழி பாதுகாப்பு – இந்தி திணிப்பு எதிர்ப்பு – தென் மாநிலங்களின் மாநாடு!

அனைத்து மொழிகளும் தேசிய ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட குரலெழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் தாய் மொழியை பாதுகாத்திடவும், இந்தி திணிப்பை எதிர்த்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “தாய்மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு தென்மாநிலங்களின் மாநாடு”

Read More »

திருவள்ளுவரை இழிவுபடுத்தும் பாஜகவினருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!

திருவள்ளுவரை இவ்வாறு இழிவுபடுத்துவதை தமிழ் மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், திருவள்ளுவரை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read More »

கம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்!

கே.பாலகிருஷ்ணன்மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்) இந்தியாவில் மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென துவக்க காலம் முதல் மகத்தான போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். இப்போராட்டங்களில் சந்தித்த அடக்குமுறைகள், வழக்குகள், சிறைகொட்டடிகள், உயிர்ப்பலிகள் ஏராளம். நீண்ட இப்போராட்டங்களின் விளைவாகவே, 1956ம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இவ்வுத்தரவு அடிப்படையிலேயே இன்றைய ‘தமிழ்நாடு’ என்ற சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. ஒரு தேசிய இனமாக… வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும், காலம் காலமாக பல பேரரசுகள், ...

Read More »

நவம்பர் 1 தமிழ்நாடு உதயமான தினம் – தமிழ் வளர்ச்சி நாள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடிக்கிறது!

அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழை அரியணை ஏற்றவும், மொழி வழி மாநில கட்டமைப்பு பாதுகாக்கப்படவும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை பெறவும், பயிற்று மொழி மற்றும் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ள விரிவானதொரு பிரச்சார இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Read More »