Tag Archives: தலித் இளைஞர் தாக்குதல் சம்பவம்

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிபிஐ(எம்) உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா மே 27 அன்று பேருந்து நிழற்குடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் ஏண்டா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்க முன்னாடியே இப்படி திமிராக உட்கார்ந்து இருப்பாய் என்று தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி வீட்டிற்கும் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் சிவன்ராஜின் பற்கள் ...

Read More »

தலித் இளைஞர்கள் மீது தீண்டாமைக் கொடுமை:சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், வீராச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கருவானூர் கிராமத்தில் வசிக்கும் குறவன் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் அரவிந்தன் (வயது 20) சின்னகனகம்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஆர்.தினேஷ் இருவரும் பெருமாள்கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தெருக்கூத்தை பார்க்கச் சென்றுள்ளனர். சாதி வெறியர்கள் சிலர் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மயக்கமுற்ற நிலையில் தண்ணீர் கேட்டதற்கு அரவிந்தன் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். பிறகு பொதுக்கழிப்பறைக்கு அருகில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சாதி வெறியர்களின் இந்த வெறிச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ...

Read More »