Tag Archives: தலித் மக்கள் மீதான தாக்குதல்கள்

பார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரம்மாள்புரம் பதைக்கம் காலனியை சார்ந்த வேல்முருகன், சுபாஷ், சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பதைக்கம் காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வீணடித்தும், மாசுபடுத்தியும் வந்த குகானந்தம், ராஜகோபால், பிரேம் ஆனந்த் மூவரையும் பதைக்கம் காலனியை சார்ந்த தலித் மக்கள் தண்ணீரை பாழடிக்காதீர்கள் என்று சொன்னதற்காக ...

Read More »

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிபிஐ(எம்) உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா மே 27 அன்று பேருந்து நிழற்குடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் ஏண்டா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்க முன்னாடியே இப்படி திமிராக உட்கார்ந்து இருப்பாய் என்று தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி வீட்டிற்கும் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் சிவன்ராஜின் பற்கள் ...

Read More »

மக்கள் சந்திப்பு இயக்கம் – பெருந்திரள் உண்ணாவிரதம்

மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுகிற தவறான பொருளாதார கொள்கைகளே பிரதான காரணமாகும். இதனை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்த்தும் சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ இணைந்து முதற்கட்டமாக 2014, ஆகஸ்ட் 25 தொடங்கி ஆகஸ்ட் 31 வரை கிராமங்கள், நகரங்கள் தோறும் வீடு, வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தினை நடத்திட தீர்மானித்திருக்கிறோம்.

Read More »