Tag Archives: தலித்

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிபிஐ(எம்) உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா மே 27 அன்று பேருந்து நிழற்குடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் ஏண்டா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்க முன்னாடியே இப்படி திமிராக உட்கார்ந்து இருப்பாய் என்று தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி வீட்டிற்கும் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் சிவன்ராஜின் பற்கள் ...

Read More »

கரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்!

சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டனம்… கரூர் மாவட்டம் சின்னமலைபட்டியில் இந்திரா நகர் காலனியில் 30க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே ஊரில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர் சேர்ந்த குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் பொது குடிநீர் பைப்பில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது அங்கு குளித்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியை சேர்ந்தவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுவர்களைப் பார்த்து சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், கடுமையாக பேசியும் ...

Read More »

இராமேஸ்வரம் காவல் ஆணையர் அடாவடி! நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (மே 26, 2015) சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்த அஞ்சுகம் என்னும் ...

Read More »

சர்வதேச மகளிர் தினம்: சிபிஐ(எம்) வாழ்த்து1

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே’ என்ற பாரதிதாசனின் வரிகள், சமுதாயத்தின் சரிபாதி விடுதலை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் அனைத்துவித பாகுபாடுகளையும் களைவதற்கான போராட்டங்களுக்கு சொந்தக்காரர்கள் என்ற முறையில் உலகெங்கிலும் உயர்ந்த லட்சியத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் பெண்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்நாளில் தன் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. முதலாளித்துவத்தின் இன்றைய முகமான நவீன தாராளமயம் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும் வாழ்வாதாரத்துக்கும் எதிராக யுத்தம் நடத்துகிற காலம் இது. பொருளாதார பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி ...

Read More »