Tag Archives: தொழிலாளர் போராட்டம்

இல்லவே இல்லை, இடம் பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை மத்திய அரசு கொடுக்கவில்லை!

இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்திலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் மிகக்கடுமையாக விமர்சனம் வைத்த பிறகு மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் திங்கள் கிழமையன்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். “மத்திய அரசும் சரி, ரயில்வேயும் சரி ஒருபோதும் இடம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது குறித்து பேசியதே கிடையாது. 85 சதவிகிதமான போக்குவரத்துச் செலவை ரயில்வேதான் ஏற்றுக் கொள்கிறது. மாநிலங்கள் வெறும் 15 சதவிகிதத்தை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன” என்று பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் கொடுத்திருந்தார். ...

Read More »

ஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தம்: இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்

நவதாராளமயக் கொள்கைகள் கைவிட வலியுறுத்தியும், மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டம், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான தேசிய மக்கள் பதிவேடு, மக்கள் தொகை தேசிய பதிவேடு போன்ற திட்டங்களை கைவிடக் கோரியும் நடைபெறும் தொழிலாளர் - விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மகத்தான வெற்றி பெறச் செய்ய தமிழக மக்கள் பேராதரவு அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Read More »