Tag Archives: பாஜக

கரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். நேற்று (18/5/20) இரவு நியூஸ் 7 தொலைக்காட்சியில்  நடைபெற்ற ஒரு விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை பாஜகவின் சார்பில் விவாதத்தில் கலந்து கொண்ட கரு.நாகராஜன் தரம் தாழ்ந்தும். அநாகரிகமாகவும் விமர்சித்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இதை வன்மையாக கண்டிக்கிறது. நியாயப்படுத்த முடியாத தங்கள் கட்சி மற்றும் ஆட்சியின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த முனையும் பாஜக மற்றும் சங்பரிவார் ஆதரவாளர்கள் அதில் தோற்றுப் போகும்போது  தனிநபர் தாக்குதலில் ...

Read More »

விடியாத பொழுதென்று எதுவும் இல்லை, முடியாத துயர் என்று எதுவும் இல்லை – என்ற நம்பிக்கையோடு மேம்பட்ட பொன்னுலகை உருவாக்கிட சபதம் ஏற்போம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அதிர வைக்கக்கூடிய பேரணிகளும், ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களுமாக மே தின விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அவரவர் இருந்த இடத்திலேயே, இப்போதிருக்கும் இடர்பாடு நீங்க உலகிற்கு மாற்றாக எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னுலகை உருவாக்குவதற்கான சூளுரையை ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் சுருண்டு கிடக்கிறது. ...

Read More »

இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (11.02.2020) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பதவி உயர்வுகள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு மீது அளித்துள்ள தீர்ப்பு ஓ.பி.சி, எஸ்.சி., – எஸ்.டி., மக்களின் உரிமைகளுக்கு விரோதமானதும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் ஆகும். உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீடு குறித்த நீண்ட நெடிய விவாதங்களுக்கு பின்னரே அரசியல் அமைப்பு சாசனம் அதை ...

Read More »

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன இயக்கம்!

மத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளை கண்டித்து தமிழகத்தில் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 2019 அக்டோபர் 13-14 தேதிகளில் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும், 2019 அக்டோபர் 16 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More »

இந்து மதம் பன்மைத்துவம் கொண்டதா? – பேரா. அருணன்

தமிழ் வரலாறு குறித்து இலக்கியச் சான்றுகள் உள்ளன; பொருள் சான்று இல்லாமலிருந்தது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் 100 ஏக்கரில் அரை ஏக்கர் நிலம் மட்டுமே அகழாய்வு செய்ததில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளன. அவை 2,200 வருடந்திற்கு முந்தையவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியமும் 2 ஆயிரம் வருடத்திற்கு முந்தையது. கீழடியில் செங்கல் சுவர் வீடு, சுடுமண் குழாயுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் என நகர நாகரீகத்தோடு தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அங்கு கிடைத்த மண்பாடங்களில் ஆதன், உதிரன், ...

Read More »

மாட்டின் பேரால் நடக்கும் கொலைகள்

2016 ஆகஸ்ட் மாதம் – மாட்டின் பெயரால் வன்முறைகள் அதிகரித்ததை கண்டித்து பிரதமர் மோடி பேசினார். ஆனால் அது வெறும் வாய்ச்சவடால் என்பதும், பாஜக ஆளும் மாநிலங்களிலேயே வன்முறையாளர்களை ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் கீழ்க்காணும் கொடூர உண்மைகள் நிரூபிக்கின்றன. செப் 2015 – முகமது அக்லக், விமானப்படை வீரனின் தந்தை அடித்துக் கொலை. (தாத்ரி) அக்டோபர் 2015, ஜாகித் ரசூல் பாட் என்ற 16 வயது இளைஞன், கால்நடை ஏற்றிவந்த ட்ரக் வாகனத்தின் மீது வீசப்பட்ட குண்டுக்கு இறையானார். (உதம்பூர்) அதேபோல ...

Read More »

தற்கொலையை, கொலையாக மாற்றிய பாஜக

தற்கொலையை கொலையாக மாற்ற முயன்று ஆதாயம் தேட முயன்ற பாஜக.

Read More »

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 3 அன்று 5 ஆயிரம் கையெழுத்துக்கள்

மத்தியில் உள்ள  மோடி அரசு, அவசர சட்டத்தின் மூலம்  விவசாயிகளின் நலன்களுக்கு   விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை கண்டித்து தமிழகம் முழுவதும், அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து  5 கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் துவங்கியது. இதில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ...

Read More »

நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்

கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை பறிக்கும் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

Read More »

கல்விக் கூடங்களில் பாஜகவின் அரசியல் திணிப்பு

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் அண்மையில் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை பாஜக அதன் அரசியலை வலிந்து கல்விக் கூடங்களில் திணிக்கும் முயற்சியினை அம்பலமாக்குகிறது. அந்த அமைச்சரகம் டிசம்பர், 25-ந் தேதி (கிறிஸ்துமஸ் விடுமுறை தினம்) முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகா சபாவின் தலைவராக இருந்த மதன்மோகன் மாளவியா ஆகியோரது பிறந்த தினமாகிய அன்று மத்திய அரசின் கீழ் நடத்தப்படும் நவோதயா பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. டிசம்பர் 24, 25 தேதிகளில் அந்த கட்டுரைப் போட்டி ...

Read More »