Tag Archives: பி.ஆர்.நடராஜன்

கோவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம்: பி.ஆர்.நடராஜன் எம்.பி திறந்து வைத்தார்!

குழந்தைகள் பயன்பெரும் வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் கோவை செங்காளி பாளையத்தில் பி.ஆர்.நடராஜன் எம்பி திங்களன்று திறந்துவைத்தார். கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட இடிகரை பேரூராட்சியில் செங்காளிபாளையம் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். கோவை நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்று பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். இதனையடுத்து மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதன்ஒருபகுதியாக கோவை செங்காளிபாளையம் பகுதியில் குழந்தைகள் ...

Read More »

விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் : பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தல் !

கோவை செட்டிவீதியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார். கோவை செட்டிவீதி செல்வசிந்தாமணி குளம் அருகே கேசி தோட்டம் பகுதியில் வனஜா (70) என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடிகள் கொண்ட வீடு உள்ளது. ஞாயிறன்று இந்த வீடு திடீரென இடிந்து விழுந்தது. முதல் தரை தளத்தில் இருந்த மூவர் பாதுகாப்பாக வெளியேறினர். முதல் தளத்தில் இருந்த வனஜா, ...

Read More »

பயன்படுத்தப்படாத சீசன் டிக்கெட்டுகளை செல்லும் என அறிவிக்க வேண்டும் : ரயில்வே துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்!

கொரோனாவால் 5 மாதம் ரயில் சேவை நிறுத்தம் பயன்படுத்தப்படாத சீசன் டிக்கெட்டுகளை செல்லும் என அறிவிக்க வேண்டும்… தெற்கு ரயில்வே துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம் ரயில் சேவை இல்லாததால் ஏற்கனவே சீசன் டிக்கெட் பெற்று பயன்படுத்தாதவர்களின் சீசன் டிக்கெட்டுகள் செல்லும் என அறிவித்து கால நீட்டிப்பு செய்து, பயணிகளின் சுமையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு ரயில்வே துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தெற்கு ரயில்வே மேலாளருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., எழுதியுள்ள ...

Read More »

பாஜக-விற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு குறித்து கிரிமினல் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்: பி.ஆர்.நடராஜன் எம்.பி கடிதம்!

மத்தியில் ஆளும் பாஜக-விற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு குறித்து கிரிமினல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என்று நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாங்கள் முகநூல் நிறுவனத்துடன் செப்டம்பர் 1, 2 தேதிகளில் நடத்தவுள்ள கூட்டம் தொடர்பாக, நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தியாவில் முகநூல் நிறுவனம் கடைப்பிடித்துவரும் கேள்விக்குரிய நடைமுறைகள் குறித்தும் அது தன்னுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் ...

Read More »

கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி நிதி ஒதுக்கீடு!

கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் அதாவது வென்ட்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை), பி.ஆர்.நடராஜன் (கோவை), சு.வெங்கடேசன் (மதுரை) ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கிவிட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். – கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Read More »