Tag Archives: புதுக்கோட்டை

மூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய மூன்றாவது மகள் வித்யா (வயது 13) என்ற சிறுமியை மந்திரவாதி வசந்தியின் பேச்சை நம்பி கொடூரமாக படுகொலை செய்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி மூக்காயியும் சேர்ந்து இந்தக் கொலையினைச் செய்துள்ளனர். சிறுமியை நரபலி கொடுத்தால் பணம் அதிகமாகச் சேரும் என மந்திரவாதியான வசந்தியின் ஆலோசனைப் படி தனது மகள் என்று பாராமல் இந்தக் கொடுமையைச் செய்துள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூடநம்பிக்கை மூடப்பழக்கவழக்கங்களால் இத்தகைய கொடூரம் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் ...

Read More »

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் சண்முகம் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக  தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தோழர்  சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக கட்சிப் பணியாற்றியவர். தொழிற்சங்கத்தில் மாவட்டத் தலைவர், கட்சியின் நகரச் செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் மற்றும் பொறுப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் மாவட்ட கட்சிக்கு தலைமை வகித்தவர். கட்சியின் ...

Read More »

செயற்குழுக் கூட்டத் தீர்மானம் (4.4.15)

4.4.2015 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (4.4.2015) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 1 மத்திய பாஜக அரசு அனைத்து எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2015-ஐ நிறைவேற்றுவதில் பிடிவாதமாக ...

Read More »